நகரசபை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: இலங்கையில், '''நகரசபை''' என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பு ஆகும். தரநிலை வ...
 
No edit summary
வரிசை 1:
இலங்கையில், '''நகரசபை''' என்பது, ஒரு [[உள்ளூராட்சி]] அமைப்பு ஆகும். தரநிலை வரிசையில் [[மாநகரசபை (இலங்கை)|மாநகரசபை]]க்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் உள்ளது. [[இலங்கை]]யில், நகரசபைச் சட்டத்தின் அடிப்படையில் நகரசபைகள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. [[இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி|பிரித்தானியர் ஆட்சி]]யின்போது, 1939 ஆம் ஆண்டில் முதன்முதலில் நகரசபைகள் உருவாக்கப்பட்டன. தற்போது இலங்கையில் உள்ள நகரசபைகளின் எண்ணிக்கை 37 ஆகும்.
 
==கடமைகளும், அதிகாரமும்==
 
நகரசபைகளின், அதிகாரம், கடமைகள் தொடர்பாக நகரசபைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரசபையொன்றின் எல்லைக்கு உட்பட்ட, [[பூங்கா]]க்கள், திறந்த வெளிகள், தோட்டங்கள், [[கால்வாய்]]கள், பொதுச் [[சந்தை]]கள், பொதுக் கட்டிடங்கள் என்பன நகரசபைக்குச் சொந்தமானவை.
 
நகரசபையின் அதிகாரத்தின் கீழ்வருகின்ற தெருக்கள், ஒழுங்கைகள் முதலியவற்றைத் துப்புரவு செய்து பேணுதல், திட்டமிடல், [[தெரு]]க்களை அகலமாக்கல், திறந்த வெளிகளுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளின்மூலம் நகரின் வளர்ச்சியை ஊக்குவித்தல், பொது வசதிகளை நிறுவிப் பேணுதல், பொதுச் சுகாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்தல் முதலியவை நகரசபையின் கடமைகளாக இருக்கின்றன.
 
==அமைப்பு==
 
நகரசபைகளுக்கு உறுப்பினர்கள் [[மக்கள்|மக்களால்]] தெரிவுசெய்யப்படுகின்றனர். நகரசபைகளில் தலைமை நிறைவேற்று அதிகாரி, அதன் ''தலைவர்'' எனப்படுகிறார். இவரும் துணைத் தலைவரும்கூட நேரடியாக மக்களாலேயே இன்று தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/நகரசபை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது