"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
கணேசையர் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். [[வண்ணார்பண்ணை]]யில் ஆரம்பமான அவரது ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, [[புன்னாலைக்கட்டுவன்]], [[குரும்பசிட்டி]], [[வயாவிளான்]] முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்திரத்தையும்’ பெற்றிருந்தார்.
 
ஈழ நாட்டின் சரி்த்திரப்சரித்திரப் பிரசித்தி பெற்ற [[நயினாதீவு|நயினாதீவின்]] சைவப்பாடசாலையில் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியப் பணியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.
 
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்க நிறுவனர் சதாசிவ ஐயரால் நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை 1921 ஆம் ஆண்டில் கணேசைர் ஏற்று 1932 வரை செயற்பட்டார். இக்காலத்தில் இவர் ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.
4

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1012842" இருந்து மீள்விக்கப்பட்டது