விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி page clean up.appropriate contents moved to Manual of style page
வரிசை 2:
 
விக்கிபீடியாவில், ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் காணப்படும் பொதுவான குறைகள் (எழுத்துப்பிழைகள், மென்பொருள் கோளாறுகள்..)குறித்து இந்தப் பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.
 
== விக்கிபீடியாவின் தமிழ் மொழி நடை! ==
 
இந்த வலைத்தளம் உருவாவதற்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் உதவினாலும் ஈழத்தை சேர்ந்த தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளதாக நான் நினைக்கிறேன். அதனால் இயல்பாகவே இந்த வலைத்தளத்தில் வழக்கில் உள்ள மொழியும் பெரும்பாலும் ஈழத்தமிழ் நடை உடையதாக இருக்கிறது என்று உணர்கிறேன். இதனால் நாடு பேதமின்றி அனைவராலும் இக்கட்டுரைகளை எளிதில் வாசிக்க இயலுமா என்று எனக்கு தோன்றுகிறது. உதாரணத்திற்கு, "பாவித்தல்" என்ற வார்த்தைக்கு பதில் "பயன் படுத்துதல்" என்ற வார்தையை பயன் படுத்தினால் எல்லா நாட்டவர்க்கும் (குறிப்பாக இந்தியாவில் உள்ளோர்க்கு) புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து. கட்டுரையாளர்கள் இக்கருத்தை கவனத்தில் கொள்ளலாம்.-அ.ரவிசங்கர்
 
:ரவிசங்கர், உங்களுடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும் இதில் ஈழத் தமிழர்கள் பலர் பங்கு கொண்டிருப்பதாக நான் கருதவில்லை. நான் ஒரு ஈழத் தமிழன். தற்பொழுது தமிழ் விக்கிபீடியாவிலிருக்கும் பெரும்பாலான கட்டுரைகளிலும், இடைமுகத்தின் மொழிபெயர்ப்பிலும் என்னுடைய பங்களிப்புப் பெருமளவுக்கு இருப்பதனால் ஈழத்தமிழ் வாசனை பெருமளவுக்கு இருக்கக்கூடும். கூடுமானவரை இப்படியான சொற்பிரயோகங்களைத் தவிர்க்கவே முயற்சித்திருக்கிறேன். இது ஒரு தற்காலிக சூழ்நிலைதான் என்பது எனது கருத்து. கடந்த ஒரு வருட காலத்தில் மிகக் குறைவானவர்களே தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். இப்பொழுது கூடிய அளவினர் இங்கே ஆர்வம் காட்டுவது தெரிகின்றது. தமிழ் நாட்டுத் தமிழர்கள் பலர் பங்களிப்புச் செய்யும்போது உங்கள் குறை தானாகவே தீர்ந்துவிடும். நீங்கள் குறிப்பிட்டது போன்ற, தமிழ்நாட்டவர் புரிந்துகொள்ளக் கடினமான சொற்கள் காணப்பட்டால் அவற்றை நீங்கள் மாற்றலாம்.[[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 18:59, 19 மார் 2005 (UTC)
 
உங்கள் கருத்து சரியே !கூகுல் இணைய தளம் போல இதுவும் பிரபலமாகி பலரும் இங்கு பங்களிப்பு செய்யும் பொழுது எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நடு நிலை மொழி நடை உருவாகும் என்று நம்புகிறேன். இந்த தளம் குறித்து எனக்கு ஒரு மாதம் முன்னர் தான் தெரியும். என்னால் முடிந்த அளவு பங்களிப்பு செய்கிறேன்.தமிழகம் குறித்த பல தகவல்கள் ஆங்கில விக்கிபீடியவில் உள்ளது. ஒரு வேளை இத்தளத்திலேயே எளிதில் தமிழில் தட்டச்சு செய்ய வசதியாக இருந்தால் இன்னும் நிறைய பேர் பங்களிப்பர் என்று நினைக்கிறேன் - அ.ரவிசங்கர்
==தவிர்க்கப்படக்கூடிய நடைப் பயன்பாடுகள்==
::சில குறிப்பிடத்தக்க மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய நடைப் பயன்பாடுகள்: ([[பயனர்:Sundar|Sundar]] 06:07, 26 ஏப் 2005 (UTC))
 
As the list below grows bigger later, we may incorporate it into the manual of style.I am adding few desirable word usages to the list.--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 10:57, 26 ஏப் 2005 (UTC)
 
 
----
 
(இப் பட்டியலை நீங்களும் விரிவுபடுத்தலாம்)
 
{| border="1" cellpadding="2"
!தவிர்க்கப்படக்கூடிய சொல்
!மாற்றுச் சொல்
|-
|நியு யொர்க்
|நியு யார்க்
|-
|திகதி
|தேதி
|-
|விசேட, விசேஷ
|சிறப்பு
|-
|யெர்மனி
|ஜெர்மனி
|-
|சனத்தொகை
|மக்கள்தொகை
|-
|குத்து மதிப்பு, ஏறத்தாழ,<br> கிட்டத்தட்ட, சுமார்(அறிவியல் கட்டுரைகளில் மட்டும்)
|தோராயமாக,அண்ணளவாக
|-
|நானாவித
|பலதரப்பட்ட (?)
|-
|உப
|துணை
|-
|சிறீ
|ஸ்ரீ
|-
|பாவித்தல்
|பயன்படுத்துதல்
|-
|சுவிற்சர்லாந்து
|சுவிட்சர்லாந்து
|-
|பிரஜா உரிமை
|குடியுரிமை
|-
|பாரிய
|குறிப்பிடத்தக்க?, பெரிய?
|}
 
"திகதி", "அண்ணளவாக" இரண்டும் சரியான தமிழ்ச் சொற்களே. தவிர்க்கப்படவேண்டியவை அல்ல என்பது எனது கருத்து. [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 19:10, 27 ஏப் 2005 (UTC)
 
:Unlike words like "uba", I was aware that the words "thigathi", "aNNaLavaaka" could be tamil words.But I felt that these words are not in common use in Tamilnadu and hence may not be understood by a common reader.Whereas,I believed, that the equivalent words "thEthi", "thOraayamaaka" can be understood by most of the people.We should try as far as possible to avoid other language words:and,at the same time if there are two equivalent tamil words we should go for the easiest and most familiar one among them.If any one feels otherwise, the list above can be modified always.( Sundar/santhosh/sanjeeth/hari- I like to know what is the equivalent word of "approximate" used in tamil science books.Thanks)--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 02:25, 28 ஏப் 2005 (UTC)
:''திகதி'', ''தெயிதி'' போன்றவற்றை என் பாட்டி பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன். ஆனால் அனைத்து தமிழருக்கும் ''தேதி'' தெரியுமானால் அதைப் பயன்படுத்தலாம். ''அண்ணளவாக'' நல்ல தமிழ் சொல் போன்று தோன்றுகிறது, எனினும் நான் இங்கு தான் முதலில் கண்டேன்.
 
:''ஏறத்தாழ'' நல்ல பயன்பாடாக இருக்கலாம். எனினும் அது ஒரு சில அதாவது அளவு (quantity) சார்ந்தவற்றைக் குறிக்கும்.
 
:''குத்து மதிப்பாக'' என்று மதுரை மற்றும் தென் தமிழ் நாட்டில் பயன்படுத்துவர். இது செந்தமிழா என்று தெரியவில்லை. இதே போன்றது ''கிட்டத் தட்ட''.
 
::அறிவியல் புத்தகங்களில் நான் பார்த்துச் சொல்கிறேன். -- [[பயனர்:Sundar|Sundar]] 04:44, 28 ஏப் 2005 (UTC)
 
குத்து மதிப்பு, ஏறத்தாழ, கிட்டத்தட்ட, சுமார் போன்றவை பேச்சு வழக்கில் இருந்தாலும் அவை அறிவியல் சொல்லாகப் பயன்படுத்த இயலாது என்று நினைக்கிறேன்.தவிரவும், மேற்கண்ட சொற்கள் எல்லா அளவைகளுக்கும் பொருந்தாது.Let us wait fr sundar's reply after he refers tamil science books.I hope that 'thEthi' is a familiar word for most people than 'thigathi' though both are tamil words only.--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 05:57, 28 ஏப் 2005 (UTC)
 
:என்னிடம் உள்ள அறிவியல் தமிழ் புத்தகத்தில் உள்ள ஒரு வரி:
:''உலகில் உயிரினங்கள் தோன்றி, சுமார் 1000 மில்லியன் ஆண்டுகளாகின்றன.''
 
:ஆனால் இப்புத்தகம் பதினோராம் வகுப்பினருக்கு என்பதை மனதில் கொள்ளவும். ''ஏறத்தாழ'' நல்ல சரியான தமிழ் சொல்லாகவே படுகிறது. -- [[பயனர்:Sundar|Sundar]] 06:34, 28 ஏப் 2005 (UTC)
 
மிகப்பெரிய அளவைகளுக்கு, 'ஏறத்தாழ' உபயோகமாக இருக்கும். எனினும் nano அளவுகளில் அதிகபட்ச துல்லியத்தைக் குறிக்க 'தோராயம்' என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆனால் 'தோராயம்' குறித்த சொல் மூலம் எனக்குத் தெரியவில்லை.ஒருவேளை,'அண்ணளவு' இலங்கையில் பரலாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில், கட்டுரைகளில் அதை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தலாம். அல்லது, அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய neutral சொல்லைக் கண்டறிய வேண்டும். Ok, I think we can conclude this discussion :)--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 07:15, 28 ஏப் 2005 (UTC)
 
* ஏறத்தாழ, குத்துமதிப்பு, கிட்டத்தட்ட, தோராயம், அண்ணளவு ஆகிய சொற்கள் அனைத்துமே approximate என்ற பொருளைத்தான் தருகின்றன. தோராயம் என்னும் சொல்தவிர எனையவை அனைத்துமே இலங்கையிலும் தாராளமாகப் புழக்கத்தில் உள்ளவைதான். சராசரி இலங்கைத் தமிழர் தோராயம் என்ற சொல்லையும் புரிந்துகொள்வர். அண்ணளவு என்பது அறிவியல் துறைகளில் தான் பெரிதும் பயன்படுகின்றது. பல கலைச் சொற்களைப்போலன்றி "அண்" + "அளவு" என்று சுலபமாகப் பொருள் புரியும் வகையிலும் உள்ளது. "சுமார்" என்பது about என்னும் பொருளில்தான் வருகிறது.
 
கலைச் சொற்களில் ஐயம் தோன்றும்போது " [http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm தமிழ் இணையப் பல்கலைக் கழக]"த்தின் இணையத்தளத்திலுள்ள கலைச்சொல் அகராதிகள் பெரிதும் பயன்படக்கூடியன. இங்கே பல காலகட்டங்களில் பல நிறுவனங்களால் வெளியிடப்பட்ட கலைச்சொல் அகராதிகளைத் தந்துள்ளார்கள். கலைக்கதிர் அகராதி, தமிழ்ப் பல்கலைக் கழக அகராதி, இலங்கை அரசு வெளியீடு, தமிழ்நாடு பாடநூல் நிறுவன அகராதி ஆகியவை உள்ளன.
இவற்றின்படி approximate அல்லது approximation என்பதன் பொருள் பின்வருமாறு:
 
:: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் - '''ஏறக்குறைய'''
:: தமிழ்ப் பல்கலைக் கழகம் - '''தோராயம்''', '''தோராயமாக்கல்'''
:: கலைக்கதிர் - '''தோராயம்'''
:: இலங்கை அரசு - '''அண்ணளவு''', '''அண்ணளவாக்கம்'''
 
பல பகுதிகளிலும் பயன்பாட்டிலுள்ள தமிழ்ச் சொற்கள் அனத்துமே தமிழ்மொழியின் பெறுமதியான சொத்துக்கள்தான், அவற்றில் எவற்றையும் தவிர்ப்பது என்பது நல்லதல்ல. தமிழ் ஒரே மொழியாக இருப்பதை இது பாதிக்கக் கூடும். பெரும்பான்மையோர் புரிந்து கொள்ளக்கூடிய சொற்களுக்கு முக்கியத்துவம் தருவதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, பல்வேறு பகுதிகளிலும் புழக்கத்திலுள்ள தமிழ்ச் சொற்களையும், பெரும்பான்மையோர் அறிந்துகொள்ளவேண்டியதும் அவசியம்தான். நிற்க, இலங்கையில் இலட்சக் கணக்கான மாணவர்கள் (12 ஆம் வகுப்புவரை) அறிவியலில் தமிழை உயிர்ப்புள்ள மொழியாக வைத்திருக்கிறார்கள் எனில் அது இலங்கைத் தமிழ்க் கலைச் சொற்கள் மூலமாகத்தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. எனவே எல்லாத் தரப்பினரும் பயன் பெறும் வகையில் வழி கண்டுபிடிக்கவேண்டியது அவசியம். [[பயனர்:Mayooranathan|Mayooranathan]] 09:51, 28 ஏப் 2005 (UTC)
 
:மயூரநாதன், விளக்கம் நன்று. விக்கிபீடியா, தேடு பொறி விடைப் பட்டியல்களில் முன்னிலையில் உள்ளதால் நாம் பயன்படுத்தும் சொல் எளிதில் புழக்கத்திற்கு வர ஏதுவாகும். ஆகையால் நாம் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துவோம். சிலர் அறிந்திருக்க மாட்டார்கள் என்றிருப்பின் Wiktionary-ல் (http://ta.wiktionary.org) விளக்கி இணைப்பு கொடுக்கலாம்.
 
:ஒரு பொதுவான கருத்து. தமிழ் நாட்டில் நம்மில் பலர் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இலங்கைத் தமிழரின் பங்களிப்பு இணையத்திலும் இணையத்திற்கு அப்பாலும் உள்ளது. -- [[பயனர்:Sundar|Sundar]] 10:08, 28 ஏப் 2005 (UTC)
 
Mayooranathan, it was certainly an eye-opener to read about your explanation for "aNNaLavu".I accept your reasoning that we should preserve and promote all good tamil words even though they may not be familiar for some people.Accordingly, I have corrected the list above.Also, you may notice that the heading is தவிர்க்கப்படக்கூடிய சொல் and not தவிர்க்கப்பட வேண்டிய சொல் :)Sundar's idea to feature such unpopular yet beautiful tamil words in wiktionary is a good suggestion.Since, wikipedia has high standing in search results, such good words might get into regular use soon.Thank you very much for the links to the technical glossaries.
 
I like your way of patient and elaborate replies :)
 
And needless to say, Srilankan tamils are pioneers in lot of tamil promoting activities.
 
(because of lack of time (exams going on !) and speed of typing, I am writing in english.Hope no one minds :) )--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User_talk:Ravidreams|(பேச்சு)]] 12:57, 28 ஏப் 2005 (UTC)
:No issues. Do your exams well. You can come back to wiki editing later. -- [[பயனர்:Sundar|Sundar]] 08:21, 29 ஏப் 2005 (UTC)
 
== எழுத்துப்பிழைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது