"நா. பார்த்தசாரதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில், [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
 
[[1965]] இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக [[தீபம் (இதழ்)|தீபம்]] என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.
 
[[1979]]ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த [[தினமணி|தினமணிக் கதிர்]] வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி[[இராணி மங்கம்மாள்]] போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து ''சுந்தரக் கனவுகள்'' என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
 
==பயண இலக்கியம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1016355" இருந்து மீள்விக்கப்பட்டது