ஜேம்ஸ் லவ்லாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Add image from http://tools.wikimedia.de/~emijrp/imagesforbio/
வரிசை 1:
[[படிமம்:James Lovelock in 2005.jpg|thumb|right|ஜேம்ஸ் லவ்லாக்]]
'''ஜேம்ஸ் லவ்லாக்''' (''James Lovelock'', [[ஜூலை 26]], [[1919]]) ஒரு சூழலியல் அறிவியலாளர். அமெரிக்க விண்வெளி அமைப்பான [[நாசா]]வின் பிற கோள்களை தேடும் ஆராய்ச்சிக்கான கருவிகளை இவர் வடிவமைத்து அளித்தார். அச்சமயம் இவர் பூமியின் வளி மண்டலத்தின் தன்மை அதிலிருக்கும் உயிர் கோளத்தால் மாறுபட்டுள்ளதை கவனித்தார். இதன் அடிப்படையில் வளிமண்டலம் உயிர்கோளத்துடன் ஒருங்கிணைந்து ஒரு முழுமையான அமைப்பாக இருப்பதை இவர் அறிந்தார். இதன் அடிப்படையில் இவர் 1960களில் பூமி ஒரு அதி உயிரி எனும் கருதுகோளை முன்வைத்தார். இதற்கு பண்டைய கிரேக்க தொன்மத்தின் பூமி தெய்வமாகிய கையா எனும் பெயரை அளித்தார். இக்கருதுகோள் சர்ச்சையையும் விவாதத்தையும் அறிவியல் வட்டாரங்களில் உருவாக்கியது. ஆனால் பரப்புரை தளத்தில் சூழலியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கிய படிமமாக மாறியது. மானுட செயல்பாடுகளை பூமியின் சூழலியல் வரலாறு சார்ந்து அறிந்து கொள்ள ஒரு வலிமையான சட்டகமாக கையா கருதுகோள் திகழ்கிறது. இக்கருதுகோளை லவ்லாக்குடன் இணைந்து உருவாக்கிய மற்றொரு ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸ். இவர் ஒரு நுண்ணுயிரியியலாளர். லவ்லாக்கின் கருதுகோள் பரிணாம அறிவியலையும் சூழலியலையும் இணைக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_லவ்லாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது