பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படும் ஒரு இனத்தின் பல்லுருத் தோற்றவமைப்புக்கள் யாவும், தமக்குரிய ஒரு குறிப்பிட்ட நிகழ்வெண்ணுடன் நிலையானவையாக [[பாரம்பரியம்|மரபு வழியாகத்]] தொடர்ந்திருக்கும். அவற்றுக்கிடையே வாழ்விற்கான போட்டி இருப்பதில்லை. மேலும் அந்த இனம் பிழைத்திருப்பதற்கு, இந்த பல்லுருத் தோற்றவமைப்புக்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்பவையாக இருக்கும். பொதுவாக நிலையான பல்லுருத்தோற்றங்கள் [[மரபியல்]] வழியிலேயே தீர்மானிக்கப்படுபவையாக இருக்கும். இந்த பல்லுருத்தோற்றமானது இயக்கத்தில் இருப்பதுடன், மெதுவாக பல்லுருத்தோற்றத்தின் வெவ்வேறு வடிவங்களையும் ஒரு சமநிலையில் பேணிக் கொண்டிருக்கும்.
====பாலின ஈருருத்தோற்றம் (Sexual dimorphism)====
[[File:Common Peafowl (Pavo cristatus) RWD2.jpg|150px|right|thumb|பாலின ஈருருத்தோற்றம்.<br /> [[மயில்|பெண்மயிலின்]] பின் ஆண்[[மயில்]]]]
 
பல [[உயிரினம்|உயிரினங்களில்]] காணப்படும், [[பெண்]], [[ஆண்]] என்ற [[பாலினம்|பாலினங்கள்]] இடையே காணப்படும் தெளிவான உருவ வேறுபாடு, பல்லுருத்தோற்றத்துக்கான ஒரு பொதுவான எடுத்துக்காட்டாக உள்ளது. இது பாலின ஈருருத்தோற்றம் எனப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது