பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[உயிரியல்|உயிரியலில்]] '''பல்லுருத்தோற்றம்''' (''Polymorphism'')<ref>([[Classical Greek|Greek]]: ''πολύ'' = many, and ''μορφή'' = form, figure, silhouette)</ref> எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட [[இனம் (உயிரியல்)|இனத்தில்]], அதன் உறுப்பினர்களிடையே பல்வேறு [[தோற்றவமைப்பு]]க்கள் காணப்படுதல் ஆகும்.
 
பல்லுருத்தோற்றம், ஓர் இனத்தின் எண்தொகையில் அல்லது இனத்தொகையில்இனம் (population), அல்லதுஇனத்தின் எண்ணிக்கை, அவ்வினம் வாழ்கின்ற சேர்ந்திருப்பில் அல்லதுசேர்ந்திருப்பு, சமூகத்தில்அச்சமூகத்தில் (colony) உள்ள உறுப்பினர்களிடையேஉறுப்பினர்கள், இவைகளில் ஏற்படும் ஆண்-பெண் [[பால் (உயிரியல்)|பாலின]] வேறுபாடுகள் தவிர்த்த தோற்றவமைப்புகள்தோற்றவமைப்புகளே பல்லுருத்தோற்றம் ஆகும். இதில் தெளிவாக வரையறுக்கப்படக்வரையறுக்கக் கூடிய, தொடரற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படும்<ref>[http://www.thefreedictionary.com/polymorphism The Free Dictionary]</ref><ref>[http://www.newworldencyclopedia.org/entry/Polymorphism New World Encyclopedia]</ref><ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/468786/polymorphism Britannica Academic Edition]</ref>. தோற்றவமைப்பு வேறுபாடுகள் எனும்போது, அவை [[உயிர்வேதியியல்]], [[உருவவியல்|உருவம்]], நடத்தை தொடர்பான இயல்புகளில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக் குறிக்கும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழ்விடத்தை]], ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற [[இனப்பெருக்கம்|இனச்சேர்க்கை]] செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்றபல்லுருத்தோற்றப் பண்பை உடைய ஓர் இனமாக வரையறுக்கப்படும்<ref name="Ford unk.">[[E.B. Ford|Ford E.B.]] 1965. ''Genetic polymorphism''. Faber & Faber, London.</ref>.
 
பல்லுருத்தோற்றம் [[இயற்கை]]யில் உயிரினங்களில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, [[உயிரியற் பல்வகைமை]], [[மரபியல் வேறுபாடு]] (Genetic variation), [[இசைவாக்கம்]] என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட [[சூழல்|சூழலில்]] ஒரு இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும்<ref name="Dobzhansky 1970">[[Theodosius Dobzhansky|Dobzhansky, Theodosius]]. 1970. ''Genetics of the Evolutionary Process''. [[New York City|New York]]: [[Columbia University Press|Columbia U. Pr.]]</ref>{{rp|126}}. ஆனாலும் இந்த வேறுபட்ட வடிவங்கள் ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாகவோ, அல்லது குறைபாடுடையதாகவோ இல்லாமல் இருப்பதனால், இயற்கைத் தேர்வில் தமக்குள் போட்டியிடுவதில்லை. இதனால் இந்த பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல [[சந்ததி]]களூடாகப் பேணப்படும்.
 
இவ்வகைப் பல்லுருத்தோற்றம் படிவளர்ச்சி என்றும் கூறப்படும் [[கூர்ப்பு]] நடைமுறையின் விளைவாகவே ஏற்படுகின்றது. இந்த இயல்பானது [[பாரம்பரியம்|மரபு வழியாகக்]] கடத்தப்படக் கூடியதாகவும், [[இயற்கைத் தேர்வு]] மூலம் சில மாற்றங்களுக்கு உட்படக் கூடியதாகவும் இருக்கும். [[மூலக்கூற்று உயிரியல்|மூலக்கூற்று உயிரியலில்]] இந்த பல்லுருத்தோற்றம் என்பது [[மரபணுவமைப்பு|மரபணுவமைப்பில்]] உள்ள சில வேறுபாடுகளைக் கொண்டு விளக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது