"பட்டுப் பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

284 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Transasia trade routes 1stC CE gr2.png|right|thumb|350px|முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.]]
 
'''பட்டுப் பாதை''' என்பது பண்டைக் காலத்தில் [[கவிகை வண்டி]]களும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது [[ஆசியா]]வின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் [[சாங்கான்]] (Chang'an) பகுதியை [[சின்ன ஆசியா]]வின் [[அன்டியோச்]]சுடன் இணைத்தது. இது 80006500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது.,<ref>{{Cite book| last = Elisseeff | first = Vadime | authorlink = | title = The Silk Roads: Highways of Culture and Commerce | publisher = UNESCO Publishing / Berghahn Books | year = 2001 | doi = | isbn = 978-92-3-103652-1 }}</ref> இதன் செல்வாக்கு [[ஜப்பான்]], [[கொரியா]] ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
 
பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் [[சீனா]], பண்டைய எகிப்து, [[மெசொப்பொத்தேமியா]], [[பாரசீகம்]], [[இந்தியா]], ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.
 
தெற்குப் பாதை, [[துருக்கிஸ்தான்-கோராசான்]] ஊடாக மெசொப்பொத்தேமியா, [[அனதோலியா]] சென்று அங்கிருந்து தெற்கு அனதோலியாவிலுள்ள [[அண்டியோச்]] ஊடாக [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலுக்கோ]] அல்லது, [[லேவண்ட்]] ஊடாக [[எகிப்து]]க்கும், [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]]வுக்குமோ செல்கிறது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1023259" இருந்து மீள்விக்கப்பட்டது