பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 102:
 
 
எடுத்துக்காட்டாக, பல Hydrozoa தொகுதியிலுள்ள பல இனங்களில், ஒரு தனியன் தன் வாழ்க்கை வட்டத்தின் ஒருநிலையில் பாலினமற்ற தோற்றவமைப்பையும் (asexual phenotype), இன்னொரு நிலையில் [[பாலினம்|பாலினத்]] தோற்றவமைப்பையும் (sexual phenotype) மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. பாலினமற்ற தோற்றவமைப்பின் உருவமானது ஒரு குழாய் போன்ற அமைப்பின் உச்சியில் பல உணர்கொம்புகள் அமைந்திருப்பதுடன், அவை அசையாமல் ஓரிடத்தில் நிலையாக நிற்பனவாக இருக்கும். இவை '''Polyp''' என அழைக்கப்படும். இவற்றின் தொழில் முக்கியமாக உணவைப் பெற்றுக் கொள்ளலாகும். பாலின தோற்றவமைப்பின் உருவம் ஒரு [[குடை]] அல்லது மணி போன்ற அமைப்பின் உச்சியில் பல நகரிழைகளைக் கொண்டிருக்கும். இவை '''Medusa''' என அழைக்கப்படும். இவை நீரில் சுதந்திரமாக நீந்தித் திரிவதுடன், [[இனப்பெருக்கம்|இனப்பெருக்கத்]] தொழிலையும் செய்கின்றன. சில இனங்கள் Polyp எனப்படும் தனியானதனியாக பாலினமற்ற தோற்றவமைப்பையோ (''எ.கா. [[பவளம்]], [[கடற் சாமந்தி]]), [[சொறிமுட்டை]] ஆகியவை'')அல்லது 'Medusa' எனப்படும் தனியானதனியாக பாலின தோற்றவமைப்பையோ (எ.கா. பெட்டி சொறிமுட்டை (Box jellyfish) எனப்படும் Cubozoa வகுப்பைச் சேர்ந்த [[சொறிமுட்டை|இழுதுமீன்/சொறிமுட்டை]]) மட்டுமே கொண்டிருப்பதுமுண்டு. உண்மையான சொறிமுட்டை (True jellyfish) என அழைக்கப்படும் Scyphozoa வகுப்பைச் சார்ந்த இழுதுமீன்கள் பொதுவாக Medusa தோற்றவமைப்பையே கொண்டிருக்கும்.
 
Hydrozoa விலுள்ள வேறு சில இனங்களில் மேலும் விருத்தியடைந்த பல்லுருத்தோற்றத்தைக் காணலாம். இவ்வினங்கள் உணவைப்பெற, பாதுகாப்பிற்காக, பாலினக் கலப்பில்லா இனப்பெருக்கம் (asexual reproduction), பாலினக் கலப்புள்ள இனப்பெருக்கம் (sexual reproduction), போன்ற வெவ்வேறு தொழில்களுக்கேற்ப தோற்றவமைப்புக்களைக் கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது