ஏர்மன் மெல்வில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 35:
==திருமணமும் பிற்காலத் தொழிலும்==
மெல்வில், மசசூச்செட்சு உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த லெமுவேல் சோ என்பவரின் மகளான "எலிசபெத் சோ"வை (Elizabeth Shaw) 1847 ஆகத்து 4 ஆம் தேதி மணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களுமாக நான்கு பிள்ளைகள் பிறந்தனர். 1850 ஆம் ஆண்டில் மசச்சூச்செட்சின் பிட்சுபீல்டில் உள்ள "அரோஹெட்" என்னும் [[பண்ணை வீடு|பண்ணை வீட்டை]] வாங்கினர். இது இப்போது [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகமாக]] உள்ளது. ஏர்மன் மெல்வில் தனது எழுத்து வேலைகளையும், பண்ணையையும் கவனித்துக்கொண்டு இங்கே 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கே வாழ்ந்த காலத்தில், அருகில் இருந்த லெனொக்சு என்னும் இடத்தில் வாழ்ந்த எழுத்தாளரான நத்தானியேல் ஹோதோர்ன் என்பவரின் நட்பையும் பெற்றார். இக்காலத்தில் ஏர்மன் எழுதிய "மொபி-டிக்" என்னும் புதினத்தை ஏர்மன் சொல்ல நத்தானியேலே எழுதினார். எனினும் சில நாட்களில் ஏர்மன் "பியரே" என்னும் புதினத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, அவர்களது நட்பு இறங்குமுகமாக இருந்தது. ஏர்மன் எழுதிய "மொபி-டிக்", "பியரே" ஆகிய இரு புதினங்களும் மக்களிடமோ திறனாய்வாளரிடமோ போதிய வரவேற்பைப் பெறவில்லை.
 
==பிற்காலம்==
மெல்வில் பல ஆண்டுகளைச் செலவிட்டு "கிளாரெல்" என்னும் 16,000 அடிகளைக் கொண்ட காவியம் ஒன்றை எழுதினார். இவரது தாயின் உடன்பிறந்தாரான பீட்டர் கான்சேவூர்ட் அளித்த கொடை மூலம் இந்தக் காவியம் 1867 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனாலும் இது படு மோசமாகத் தோல்வியைத் தழுவியது. விற்பனையாகாத இந்நூலின் படிகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
 
ஏர்மனது எழுத்துத் தொழில் இறங்குமுகமாகச் சென்று கொண்டிருந்தபோது, இவரது திருமண உறவும் சிக்கலான நிலையில் இருந்தது. இவரது மனைவி எலிசபெத்தின் உறவினர்கள் ஏர்மனை விட்டு விலகி விடுமாறு வற்புறுத்தி வந்தனர். ஆனாலும் எலிசபெத் இதற்கு இணங்கவில்லை. 1867ல், ஏர்மனின் மூத்த மகன் தவறுதலாகவோ என்னவோ தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். ஏர்மனைக் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் எலிசபெத்தின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது. அவரது வெறித்தனம் குறைந்ததுடன், மனநிலையும் சீராகி வந்தது. ஆனால், அவர்களது இரண்டாவது மகன் இசுட்டான்விக்சு, 1886 ஆம் ஆண்டு [[சான் பிரான்சிசுக்கோ]]வில் இறந்தபோது ஏர்மனுக்கு மன அழுத்தங்கள் கூடின. அவரது மனைவியின் உறவினர்கள் பலர் இறந்தபோது ஏர்மனின் மனைவிக்குச் சொத்துக்கள் சில கிடைத்தன. அவற்றைத் திறமையாக நிர்வாகம் செய்து நல்ல வருமானம் பெற்றபோது ஏர்மன் மெல்வில் எழுதுவதில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.
 
ஏர்மன் மெல்வில், 1891 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் தேதி, தனது 72 ஆவது வயதில், நியூயார்க்கில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
 
[[பகுப்பு:அமெரிக்க எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்மன்_மெல்வில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது