பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கூர்ப்பில்(வளர்ச்சியில்) பல்லுருத்தோற்றம்: *உரை திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 4:
ஓர் இனத்தின் எண்தொகையில் (population), அல்லது அவ்வினம் வாழ்கின்ற சேர்ந்திருப்பில் (colony) உள்ள உறுப்பினர்களிடையே, ஆண்-பெண் இனப்பெருக்கத்துக்குரிய [[பால் (உயிரியல்)|பாலின]] வேறுபாடுகள் தவிர்த்த, வேறுபட்ட தோற்றவமைப்புகள் காணப்படுதலே,
உயிரியலில், பல்லுருத்தோற்றம் என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இதில் தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய, தொடரற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படும்<ref>[http://www.thefreedictionary.com/polymorphism The Free Dictionary]</ref><ref>[http://www.newworldencyclopedia.org/entry/Polymorphism New World Encyclopedia]</ref><ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/468786/polymorphism Britannica Academic Edition]</ref>. தோற்றவமைப்பு வேறுபாடுகள் எனும்போது, அவை [[உயிர்வேதியியல்]], [[உருவவியல்]], நடத்தை தொடர்பான இயல்புகளில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக் குறிக்கும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழ்விடத்தை]], ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற [[இனப்பெருக்கம்|இனச்சேர்க்கை]] செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்றப் பண்பை உடைய ஓர் இனமாக வரையறுக்கப்படும்<ref name="Ford unk.">
பல்லுருத்தோற்றம் [[இயற்கை]]யில் உயிரினங்களில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, [[உயிரியற் பல்வகைமை]], [[மரபியல் வேறுபாடு]] (Genetic variation), [[இசைவாக்கம்]] என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட [[சூழல்|சூழலில்]] ஒரு இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும்<ref name="Dobzhansky 1970">
இவ்வகைப் பல்லுருத்தோற்றம் படிவளர்ச்சி என்றும் கூறப்படும் [[கூர்ப்பு]] நடைமுறையின் விளைவாகவே ஏற்படுகின்றது. இந்த இயல்பானது [[பாரம்பரியம்|மரபு வழியாகக்]] கடத்தப்படக் கூடியதாகவும், [[இயற்கைத் தேர்வு]] மூலம் சில மாற்றங்களுக்கு உட்படக் கூடியதாகவும் இருக்கும். [[மூலக்கூற்று உயிரியல்|மூலக்கூற்று உயிரியலில்]] இந்த பல்லுருத்தோற்றம் என்பது [[மரபணுவமைப்பு|மரபணுவமைப்பில்]] உள்ள சில வேறுபாடுகளைக் கொண்டு விளக்கப்படுகின்றது.
|