பல்லுருத்தோற்றம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
உயிரியலில், பல்லுருத்தோற்றம் என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இதில் தெளிவாக வரையறுக்கப்படக் கூடிய, தொடரற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படும்<ref>[http://www.thefreedictionary.com/polymorphism The Free Dictionary]</ref><ref>[http://www.newworldencyclopedia.org/entry/Polymorphism New World Encyclopedia]</ref><ref name="Britannica">[http://www.britannica.com/EBchecked/topic/468786/polymorphism Britannica Academic Edition]</ref>. தோற்றவமைப்பு வேறுபாடுகள் எனும்போது, அவை [[உயிர்வேதியியல்]], [[உருவவியல்]], நடத்தை தொடர்பான இயல்புகளில் உள்ள அடிப்படை வேறுபாடுகளைக் குறிக்கும். தோற்றவமைப்புக்கள் வேறுபட்டு இருப்பினும், அவை யாவும் ஒரே [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழ்விடத்தை]], ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடியவையாகவும், தமக்கிடையே தடைகளற்ற [[இனப்பெருக்கம்|இனச்சேர்க்கை]] செய்யக்கூடியனவாகவும் இருந்தால் மட்டுமே அவை பல்லுருத்தோற்றப் பண்பை உடைய ஓர் இனமாக வரையறுக்கப்படும்<ref name="Ford unk.">Ford E.B. 1965. ''Genetic polymorphism''. Faber & Faber, London.</ref>.
 
பல்லுருத்தோற்றம் [[இயற்கை]]யில் உயிரினங்களில் காணப்படும் ஒரு பொதுவான தோற்றப்பாடாகும். பல்லுருத்தோற்றமானது, [[உயிரியற் பல்வகைமை]], [[மரபியல் வேறுபாடு]] (Genetic variation), [[இசைவாக்கம்]] என்பவற்றுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. வேறுபட்ட [[சூழல்|சூழலில்]] ஒரு இனம் தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொள்ள, இந்த தோற்ற வேறுபாடுகள் உதவும்<ref name="Dobzhansky 1970">Dobzhansky, Theodosius. 1970. ''Genetics of the Evolutionary Process''. [[New York City|New York]]: [[Columbia University Press|Columbia U. Pr.]]</ref>{{rp|126}}. ஆனாலும் இந்த வேறுபட்ட வடிவங்கள் ஒன்றைவிட ஒன்று மேம்பட்டதாகவோ, அல்லது குறைபாடுடையதாகவோ இல்லாமல் இருப்பதனால், இயற்கைத் தேர்வில் தமக்குள் போட்டியிடுவதில்லை. இதனால் இந்த பல்லுருத்தோற்றம் தொடர்ந்து பல [[சந்ததி]]களூடாகப் பேணப்படும்.
 
இவ்வகைப் பல்லுருத்தோற்றம் படிவளர்ச்சி என்றும் கூறப்படும் [[கூர்ப்பு]] நடைமுறையின் விளைவாகவே ஏற்படுகின்றது. இந்த இயல்பானது [[பாரம்பரியம்|மரபு வழியாகக்]] கடத்தப்படக் கூடியதாகவும், [[இயற்கைத் தேர்வு]] மூலம் சில மாற்றங்களுக்கு உட்படக் கூடியதாகவும் இருக்கும். [[மூலக்கூற்று உயிரியல்|மூலக்கூற்று உயிரியலில்]] இந்த பல்லுருத்தோற்றம் என்பது [[மரபணுவமைப்பு|மரபணுவமைப்பில்]] உள்ள சில வேறுபாடுகளைக் கொண்டு விளக்கப்படுகின்றது.
வரிசை 15:
பல்லுருத்தோற்றம் என்பது, மிகவும் பரந்த பொருளைக் கொண்டிருப்பினும், [[உயிரியல்|உயிரியலில்]] இந்தச் சொல் வரையறுக்கப்பட்ட பொருளைத் தருகின்றது.
*பல்லுருத்தோற்ற இயல்புகள் தொடர்ந்த வேறுபாட்டைக் காட்டும் இயல்புகள் அல்ல. எடுத்துக்காட்டாக ஒரு உயிரினத்தில் 'உயரம்' [[சந்ததி]]யூடாகக் கடத்தப்படும் இயல்பாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக நிகழும் வேறுபாட்டைக் கொண்டிருப்பதனால், அவ்வியல்பு இங்கே கருத்தில் எடுக்கப்படுவதில்லை. [[நிறம்]] போன்ற தொடரற்ற வேறுபாட்டு இயல்புகளே கருத்தில் கொள்ளப்படும்.
*[[தோற்றவமைப்பு]]க்கள் ஒரே இடத்தில், ஒரே நேரம் வாழும் தன்மை கொண்டனவாக இருக்க வேண்டும். இதன் மூலம் [[புவியியல்]] வேறுபாடுடைய, [[காலநிலை]] வேறுபாடுடைய தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கருதப்படுவது தவிர்க்கப்படும்<ref name="Sheppard 1975">[[Philip Sheppard|Sheppard, Philip M.]], 1975. ''Natural Selection and Heredity'' (4th ed.) London: Hutchinson.</ref>.
*ஆரம்பத்தில் இந்தச் சொல்லானது, பார்த்து அறியக்கூடிய இயல்புகளையே குறிப்பதாக இருந்தாலும், தற்போது, சோதனைகள் மூலம் பிரித்தறியக் கூடிய [[குருதி வகை]] போன்ற இயல்புகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
*அரிதாக நிகழும் வேறுபாடுகள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. [[மரபணு திடீர்மாற்றம்|மரபணு திடீர்மாற்றத்தால்]] உருவாகும் தோற்றவமைப்புக்கள் பல்லுருத்தோற்றமாகக் கொள்ளப்படுவதில்லை. மிகவும் குறைந்த நிகழ்வெண்ணுடைய தோற்றவமைப்பானது, மரபணு திடீர்மாற்றத்தால் உருவாகும் ஒரு தோற்றவமைப்பின் நிகழ்வெண்ணை விட அதிகமாக இருக்க வேண்டும்<ref name="Ford 1975"/><ref name="Ford 1940">{{cite book |last=Ford |first=E. B. |year=1940 |title=The New Systematics |chapter=Polymorphism and Taxonomy | editor=[[Julian Huxley]] (ed.) |publisher=[[Clarendon Press|Clarendon Pr.]], |location=Oxford | pages=493&ndash;513 |isbn=1930723725}}</ref>. இந்த நிகழ்வெண் அண்ணளவாக 1% ஐ விட அதிகமாக இருக்க வேண்டும் எனக் கொள்ளப்படுகின்றது. ஒரு தனி [[எதிருரு]]வில் ஏற்படக்கூடிய [[மரபணு]] திடீர்மாற்ற நிகழ்வெண் 1% ஐ விட மிகவும் குறைவாகவே இருக்கும்<ref name="Sheppard 1975" />{{rp|ch. 5}}.
 
==சூழலியல்==
வரிசை 52:
பாலினமற்ற [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] (asexual reproduction) முறையிலிருந்து கூர்ப்படைந்தே பாலின இனப்பெருக்க (sexual reproduction) முறை உருவாகியது என நம்பப்படுகின்றது. பாலின இனப்பெருக்கத்திலும், [[அழிதூஉ|இருபால் உடலி]] இனப்பெருக்கத்திலும் (hermaphroditic reproduction) மீள்இணைதல் (recombination) மூலம், [[மரபியல் பல்வகைமை]] (genetic diversity) ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது<ref name="Smith 1998">Smith, John Maynard. 1998. ''Evolutionary Genetics'' (2nd ed.). Oxford: Oxford U. Pr.</ref><sup>p234</sup><ref>Gillespie J.G. 2004. ''Population genetics: a concise guide''. 2nd ed, Johns Hopkins University Press, Baltimore.</ref><sup>ch7</sup>. இந்த காரணத்தால் அவை பாலினமற்ற இனப்பெருக்கத்தைவிட உயர்வானதாகக் கொள்ளப்படுகின்றது. ஆனால், இருபால் உடலியின் இனப்பெருக்கத்தை விடவும் பாலின இனப்பெருக்கம் எவ்வகையில் உயர்ந்தது என்பது இன்னமும் தெளிவற்று இருக்கின்றது. இருபால் உடலியில் ஒரேபால் மீளிணைதலும் நடக்கும் சாத்தியம் இருப்பதனால் அங்கேயே அதிகளவு மரபியல் பல்வகைமை ஏற்பட முடியும் என நம்பப்படுகின்றது.
 
பாலினமற்ற இனப்பெருக்கம் எளிமையானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கின்றது. இருபால் உடலி முறை இனப்பெருக்கம் அதிகளவு மரபியல் பல்வகைமையைத் தோற்றுவிக்கின்றது. அப்படியிருந்தும் முன்னேறிய இனங்கள் பாலின இனப்பெருக்கத்தைக் (ஆண், பெண் தனியாக உள்ள உயிரினங்கள்) கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. ஆண், பெண் என தனித்தனி பாலின தனியன்கள் இருக்கையில், ஆண்களில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு செல்வது அதிகமாக இருக்கும் வேளையில், பெண்களில் ஏற்கனவே இருக்கும் [[மரபணுவமைப்பு]] பேணப்படலாம் எனக் கூறப்படுகின்றது<ref>Geodakyan, V. A. 2000. Evolutionary chromosomes and evolutionary sex dimorphism. ''Biology Bulletin'' '''27''', 99–113.</ref>. இதன்மூலம் குறிப்பிட்ட இனத்தில் [[நோய்த்தொற்று]], தீங்கு விளைவிக்கும் [[ஒட்டுண்ணி வாழ்வு|ஒட்டுண்ணிகள்]], [[கொன்றுண்ணல்|கொன்றுண்ணிகள்]] போன்றவற்றை எதிர்த்து வாழும் தன்மை கூடலாம் என நம்பப்படுகின்றது<ref>[[Ronald Fisher|Fisher, Ronald]]. 1930. ''The {{sic|hide=y|Gen|etical}} Theory of Natural Selection''</ref><ref>[[W. D. Hamilton|Hamilton, W. D.]] 2002. ''Narrow Roads of Gene Land, Vol. 2: Evolution of Sex''. Oxford: Oxford U. Pr.</ref><ref name="Smith 1978">Smith, John Maynard. 1978. ''The Evolution of Sex''. Cambridge: Cambridge U. Pr.</ref>.
 
====எதிருரு பல்லுருத்தோற்றம் (Allelic polymorphism)====
வரிசை 128:
இதில் வேறொரு விடயமும் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு நூற்றாண்டின் பின்னர் குறிப்பிட்ட கருமை நிற வடிவத்தில் கருமையின் அளவும் கூடியிருந்தது. இதனால், கருமை நிறமானது மிகவும் உறுதியான தேர்வுக்கு உட்பட்டிருந்தது அறிய முடிந்தது.
 
மரத்தின் பின்புலத்தை ஒத்திருக்கும் தன்மைகொண்டு, மரங்களில் ஓய்வான நிலையில் இருந்து, அதன்மூலம் [[பூச்சியுண்ணி|பூச்சியுண்ணும்]] [[பறவை]]களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய இயல்புடைய இது போன்ற இனங்களில் மட்டுமே இந்த தொழிற்சாலை மாசினால் ஏற்பட்ட தாக்கம் வெளித் தெரிந்தது. ஏனைய இறந்த இலைகளில் வாழும் [[பூச்சி]]களிலோ, அல்லது [[பட்டாம்பூச்சி]]களிலோ இந்தத் தாக்கம் வெளிப்படவில்லை<ref name="Ford 1965">Ford, E. B. 1965. "Heterozygous Advantage". In ''Genetic Polymorphism''. [[Boston, Massachusetts|Boston]]/London.: [[MIT Press|MIT Pr.]]/[[Faber & Faber]]</ref><ref name="Majerus 1998"/><ref>Kettlewell H.B.D. 1973. ''The Evolution of Melanism''. Oxford: Oxford U. Pr.</ref>.
 
====சூழலுக்கேற்ற வேறுபாடு காட்டல் (Polyphenism)====
"https://ta.wikipedia.org/wiki/பல்லுருத்தோற்றம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது