மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
எடுத்துக்காட்டாக, ஐக்கிய அமெரிக்க மாநிலமான [[மசச்சூசெட்சு|மசச்சூசெட்சில்]] உள்ளூர் சட்டவாக்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட [[கூட்டிணைப்பு விதி]]கள் மாநகரத்தை, நகரத்தில் இருந்து வேறுபடுத்துகின்றன. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திலும்]], சில [[பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளிலும் மாநகரம் என்பது [[அரச பட்டயம்|அரச பட்டயத்துடன்]] கூடிய ஒரு குடியிருப்பு ஆகும். முற்காலத்தில் [[ஐரோப்பா]]வில் [[பேராலயம்]] ஒன்றுடன் கூடிய நகர்ப்புறக் குடியிருப்பு மாநகரம் எனக் கருதப்பட்டது.
 
மநகரங்கள் பொதுவாகச் சுற்றுப்புறத்தூய்மை, பயன்படுசேவைகள், நிலப்பயன்பாடு, வீடமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கான சிக்கலான முறைமைகளைக் கொண்டவை. மாநகரங்களில் காணும் செறிவான வளர்ச்சி மக்களிடையேயும், வணிக நிறுவனங்களுக்கு இடையேயுமான ஊடாட்டங்களை ஊக்குவித்து இரு பகுதியினருக்கும் நன்மை விளைவிக்கிறது. பெரிய மாநகரம் பொதுவாக புறநகர்கள், கூடுதல்நகர்ப் பகுதிகள் என்பவற்றைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான மாநகரங்கள், தலைமைநகரங்களுடனும், நகர்ப்புறப் பகுதிகளுடனும் தொடர்பு கொண்டவையாக, வேலைக்காக நகர்ப்புற மையங்களை நோக்கிச் செல்லும் தொழில்சார்ந்த போக்குவரத்துச் செய்பவர்களை பெருமளவில் உருவாக்குகின்றன. மாநகரங்கள் இன்னொரு நகரத்தைத் தொடுமளவுக்கு வளர்ந்தால் அந்நகரங்களை உள்ளடக்கிய பகுதி [[நகரக்கூட்டம்]] (conurbation) எனப்படும்.
 
==தோற்றம்==
முதல் நகரங்கள் தோன்றியமைக்கான நிலைமைகளை அறிந்து கொள்வதற்குப் போதிய சான்றுகள் இல்லை. நகரங்கள் தோன்றியமைக்கான முன்நிபந்தனைகள், இவ்வுருவாக்கத்துக்கு உந்து விசையாக இருந்திருக்கக்கூடிய அடிப்படையான பொறிமுறைகள் என்பன குறித்துப் பல்வேறு கோட்பாட்டாளர்கள் தமக்குச் சரியெனத் தோன்றிய கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
 
===கோட்பாடுகள்===
====வேளாண்மை முதன்மை====
[[புதியகற்காலப் புரட்சி]]க்குப் பின்பே முதல் நகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது [[வேளாண்மை]] அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது. வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது [[நாடோடி வாழ்க்கை]]யைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய [[பால் பைரோச்]] என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என வாதித்தார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது