மாநகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
===கோட்பாடுகள்===
====வேளாண்மை முதன்மை====
[[புதியகற்காலப் புரட்சி]]க்குப் பின்பே முதல் நகரங்கள் தோன்றின என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. புதியகற்காலப் புரட்சியின்போது [[வேளாண்மை]] அறிமுகமானது. இது மக்கள் அடர்த்தியாக வாழ்வதைச் சாத்தியமாக்கியதன் மூலம் மாநகரங்கள் வளர்வதற்கு உதவியது. வேளாண்மையின் அறிமுகம், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த மக்களைத் தமது [[நாடோடி வாழ்க்கை]]யைக் கைவிட்டு வேளாண்மையைக் கைக்கொண்ட மக்களுக்கு அருகில் நிரந்தரமாக வாழ்வதற்கு ஊக்குவித்தது. வேளாண்மையினால் மக்கள்தொகை அடர்த்தி கூடியதும், ஓரலகு நிலத்தில் இருந்து பெறக்கூடிய உணவு உற்பத்தி அளவு கூடியதும் மாநகரங்களில் இடம்பெறுவன போன்ற நடவடிக்கைகளுக்கான வாய்ப்பான சூழ்நிலைகளை உருவாக்கின. "மாநகரங்களும் பொருளாதார வளர்ச்சியும்" என்னும் நூலை எழுதிய [[பால் பைரோச்]] என்பார் மேற் சொன்ன நிலைப்பாட்டை ஆதரிப்பவராக இருந்தார். இந்நூலில், உண்மையான மாநகரங்கள் உருவாவதற்கு முன் வேளாண்மை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வாதித்தார்.
 
ஒரு குடியிருப்பு மாநகரம் என்னும் தகுதியைப் பெறுவதற்கு, அது வணிகத்தை ஆதரிப்பதற்கான மிகையான மூலப்பொருட்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது [[வேரே கோர்டன் சில்டே]] என்பவரது கருத்து. புதிய கற்காலத்துக்கு முன்னர், வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த சமுதாயங்களில், பெருமளவிலான மக்கள்தொகையைத் தாங்குவதற்குத் தேவையான உணவை வழங்குவதற்கு பெரிய நிலப்பரப்புத் தேவைப்பட்டது. இது வணிக ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதை இயாலாதது ஆக்கியிருக்கும் என்கிறார் பைரோச்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/மாநகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது