ஜே. ஆர். ரங்கராஜு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஜே. ஆர். ரங்கராஜூ''' (ஜே. ஆர். ரெங்கராஜூ, 1875-1959) ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். தமிழ் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல புகழ்பெற்ற [[துப்பறிவுப் புனைவு|துப்பறியும் புதினங்களை]] எழுதியுள்ளார்.
 
இவரது முழுப்பெயர் ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. [[பாளையங்கோட்டை]]யில் 1875 இல் பிறந்தார். 1908 முதல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன், இவர் உருவாக்கிய புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம். சவுக்கடி சந்திரகாந்தா எனும் புரட்சிப்பெண் பாத்திரத்தையும் உருவாக்கினார். இவரது புதினங்களில் கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் காணக் கிடைக்கின்றன. மொத்தம் எட்டு புதினங்கள் எழுதியுள்ளார். அவை பலமுறை மறுபதிப்பு கண்டுள்ளன. ''இராஜாம்பாள்'' 23 பதிப்புகள், ''சந்திரகாந்தா'' 13 பதிப்புகள், ''மோஹனசுந்தரம்'' 12 பதிப்புகள், ''ஆனந்தகிருஷ்ணன்'' 10 பதிப்புகள், ''ராஜேந்திரன்'' 9 பதிப்புகள், ''வரதராஜன்'' 2 பதிப்புகள் வெளிவந்தன. மொத்தம் 70,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகின. இராஜாம்பாள் புதினம் மேடை நாடகமாக்கப்பட்டது. [[ராஜாம்பாள்|1935]] இலும் [[ராஜாம்பாள் (1951 திரைப்படம்)|1951]] இலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டது.
 
இவர் 1910களில் வெளியான “கிரிஷிகன்” என்னும் இதழின் ஆசிரியாகப் பணியாற்றினார். ரங்கராஜூ ஒரு வேளாண்மைக்காரரும் கூட. சென்னை கிண்டி, ராஜ் பவன் மாளிகைக்கு எதிரில் அமைந்திருந்த அவரது “ராஜூ தோட்டம்” புகழ் பெற்றது.
வரிசை 21:
*[http://books.google.co.in/books?id=MB62AAAAIAAJ&q=j+r+rangaraju&dq=j+r+rangaraju&hl=en&sa=X&ei=yU4_T-B3xNStB56GwK4H&ved=0CFIQ6AEwBQ Indian Review, Volume 74]
*[http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p1013662.htm மோஹனசுந்தரம் திறனாய்வு]
*[http://books.google.co.in/books?id=VPJ7jqVSl34C&pg=PA91 Early novels in India, Meenakshi Mukherjee]
"https://ta.wikipedia.org/wiki/ஜே._ஆர்._ரங்கராஜு" இலிருந்து மீள்விக்கப்பட்டது