ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,417 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் " என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன. நேர்மின் கதிர்களைக் கொண்டு வெவ்வேறு வகையான அணுக்களையும் மூலக்கூறுகளையும் பிரிப்பது பற்றிய ஆஸ்டன், டெம்ப்ஸ்டர் போன்ற அறிவியலறிஞர்களுடைய கருத்துகளின் மூலமாகப் பல ஐசோடோப்புகளைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு முறையைப் பற்றி விளக்கினார். நியான் வாயுவைப் பகுத்து இவர் செய்த ஆய்வின் மூலம் அசோடோப்புகளின் கலவையாக சில தனிமங்கள் இருப்பதைத் தெளிவாக்கினார். அதன் அடிப்படையில் இவருடைய மாணவர்கள் ஆசுடன், டெம்ப்ஸ்டெர் ஆகியோர் இணைந்து நிறை நிலைமானி (Mass spectrograph)உருவாக்கினர். 1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒளி, பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவதில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான ரூதர்போர்டுக்கு உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது.
 
 
ஒளியின் அமைப்பு பொருளின் துகள் கொள்கை நேர் மின்சாரக் கதிர்கள் வேதியியலில் எலக்ட்ரான் மறுசேகரிப்பும் பிரதிபலிப்புகளும்(தன் வரலாறு) போன்ற பல நூல்களை எழுதி வெளீயிட்டார். 1908 -ல் இவருக்குத் தகுதி வரிசை மதிப்பு (Order of Merit) அளிக்கப்பட்டது. 1912 -ல் ஆங்கிலேயச் சங்கத்தின் தலைவரானார். ராயல் கழகத்டின் சிறப்பு உறுப்பினர் பதவியும், அதன் பின் 1916 முதல் 1920 வரை அதன் தலைவர் பதவியும் அளிக்கப்பட்டது. 1918-ல் டிரினிடி கல்லூரியின் முதல்வரனார். கேவண்டிஷ் ஆராய்ச்சொ சாலையை இவர் அங்கு நிறுவினார். ராயல் ஹ்யூஜெஸ் பதக்கங்கள் (1894,1902) வாசிங்டன் சுமித்சோனியன் நிறுவனத்தின் ஹாட்கின்ஸ் பதக்கம் (1902) ஸ்காட் பதக்கம்(பிலாடெல்பியா-1923) எனப் பல பதக்கங்களைப் பெற்று பெருமையடைந்தார்.
 
இவ்வாறு பல பரிசுகள் பெற்றுச் சிறாந்து விளங்கி 85 ஆண்டுகள் வாழ்ந்து 1940 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். புகழ்பெற்ற பல மேதைகள் புதைக்கப்பட வெஸ்ட் மினிஸ்டர் அப்பே (West Minister Abbey) என்ற இடத்தில் இவருடைய உடல் அனைத்து மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
{{commons|Joseph John Thomson}}
 
15,149

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027310" இருந்து மீள்விக்கப்பட்டது