க. வெள்ளைவாரணனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''க. வெள்ளை வாரணனார்''' (சனவரி - 14-1917, 19881917- சூன் 13, 1988) தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர். யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.
 
==இளமை==
தஞ்சை மாவட்டம் குடந்தைக்கு அருகிலுள்ள திருநாகேசுவரத்தில் கந்தசாமி - அமிர்தம் அம்மையார் தம்பதியருக்கு மகவாக 1917ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெள்ளைவாரணனார் பிறந்தார். தம் இளமைக் கல்வியை திருநாகேசுவரத்தில் கற்ற வெள்ளைவாரணனார், திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் தேவாரப் பாடசாலையில் மாணாக்கராகச் சேர்ந்து திருமுறைகளை இசையோடு கற்றுத் தேர்ச்சி பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் படிப்பில் சேர்ந்து 1935ல் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
வரி 8 ⟶ 9:
 
பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் மாணாக்கரின் அன்புக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், திருமுறைகள், சைவசித்தாந்தம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோய நற்றமிழ் அறிஞரகத் திகழ்ந்தார்.
 
==நூல்கள்==
வெள்ளைவாரணனாரின் உரை நூல்கள் அவரின் நுண்மான் நுழை புலத்தினைக் காட்டுவன.விபுலானந்தரின் யாழ் நூலுக்கு இவர் எழுதியுள்ள முன்னுரை இவரின் இசைப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில
 
வெள்ளைவாரணனார் எழுதிய நூல்கள் சில<br />
===இலக்கண நூல்கள்===
# தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்
வரி 65 ⟶ 67:
 
==இந்தி மொழி எதிர்ப்பு==
[[இராஜ கோபாலாச்சாரியார்]] [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] முதலமைச்சரக இருந்த போது 1938ல் [[இந்தியா]]விலேயே முதன் முதலாக சென்னை மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல், இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதை எதிர்த்து [[மறைமலையடிகள்]], [[சோமசுந்தர பாரதியார்]], [[ஈ.வெ.ரா|பெரியார்]], அறிஞர் [[அண்ணாதுரை]] முதலானோர் [[இந்தி எதிர்ப்புப் போராட்டம்|எதிப்புக் குரல்]] கொடுத்தனர். பலர் சிறைப்படுத்தப்பட்டனர். தமிழ்ப் புலவர் பெருமக்கள் கிளர்ந்தெழுந்தனர். இவ்வெழுச்சி கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிய வெள்ளைவாரணனாரையும் ஆட்கொண்டது. 1939ல் 'பாந்தளூர் வெண்கோழியார்' என்ற புனைப் பெயரில் 'காக்கை விடுதூது' என்னும் நூலை எழுதி முதலமைச்சருக்கு அனுப்பியதன் மூலம் போராட்டத்தில் தாமும் ஈடுபட்டார்.
 
== சிறப்புகள்==
வரி 82 ⟶ 84:
 
==மறைவு==
[[தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்|தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்]] பணியாற்றும்போது வெள்ளைவாரணனாருக்கு உடல் நலம் குன்றியது.எனவே [[சிதம்பரம்|தில்லை]] சென்று தங்கி வாழ்ந்திருந்த வெள்ளைவாரணனார் 1988ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
==உசாத்துணை==
* [http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=139&Itemid=208| தமிழ் மரபு அறக்கட்டளை வலைப் பதிவு]
"https://ta.wikipedia.org/wiki/க._வெள்ளைவாரணனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது