முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

2,379 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
[[பிரித்தானிய வெப்ப அலகு]] என்னும் வெப்ப அலகு மிகவும் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று. இது [[எரியாற்றல்|எரியாற்றலின்]] அளவைக் கொண்டு குறிப்பது ஆகும். ஒரு [[பி. டி. யு]] (British Therman Unit, BTU) என்பது கடல்மட்ட சீர்நிலை அழுத்தத்தில் இருக்கும் ஒரு [[இறாத்தல்|பவுண்டு]] [[நீர்|நீரை]] ஓர் அலகு (ஒரு பாகை) வெப்பம் ஏற்றுவதற்குத் தேவையான [[ஆற்றல்|ஆற்றலை]]க் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கன அடி இயற்கை வளியில் 1027 பி. டி. யு உள்ளது.
 
== பயன்கள் ==
=== மின்னாற்றல் ===
[[எரிவளிச் சுழலி]]கள் மூலமும் [[நீராவிச் சுழலி]]கள் மூலமும் மின்னாற்றல் உற்பத்தி செய்வதற்கு இயற்கை எரிவளி பெரிதும் உதவுகிறது. இவ்விரண்டு சுழலிகளையும் ஒருங்கே சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தித் திறனைக் கூட்டலாம். சில வேளைககளில், எரிவளிச் சுழலிகளோடு [[கொதிகலன்]]களையும் சேர்த்து ஒரே நேரத்தில் மின்னாற்றலையும் நீராவியையும் உற்பத்தி செய்வர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் நீராவியை வேதி ஆலையில் பிற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வர். சுழலிகள் இன்றி, எளிமையாகக் கொதிகலன்களை மட்டும் வைத்து நீராவியை மட்டும் உற்பத்தி செய்யவும் இயற்கை எரிவளியைப் பயன்படுத்துவது உண்டு.
 
=== வீட்டுப் பயன்பாடு ===
அடுப்புக்களின் வழியே இயற்கை எரிவளியை எரிப்பதன் மூலம் 2000°F வரை வெப்பத்தை உண்டாக்க இயலும். வீட்டினுள் சமையலுக்கும் வெப்பமேற்றுவதற்கும் இவ்வளி பயன்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், குழாய்கள் வழியாக எரிவளி வீடுகளுக்கு அனுப்பப் படுகிறது. சமையலுக்கும், துணிகள் காயவைப்பதற்கும், அறைகளை வெப்பமுற வைப்பதற்கும் இது பயன்படுகிறது.
 
=== போக்குவரத்துப் பயன்பாடு ===
அழுத்தப்பட்ட இயற்கை எரிவளியைப் போக்குவரத்து எரிபொருளாகப் பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். 2008ஆம் ஆண்டளவில் உலக அளவில் பல நாடுகளில் ஏறத்தாழ 9.6 மில்லியன் வாகனங்கள் எரிவளியைப் பயன்படுத்தின. அவற்றுள் பாகிஸ்த்தான், அர்சென்டினா, பிரேசில், ஈரான், இந்தியா போன்ற நாடுகளும் அடக்கம். <ref>{{cite web|url=http://www.iangv.org/tools-resources/statistics.html|title=Natural Gas Vehicle Statistics|publisher=International Association for Natural Gas Vehicles|date= |accessdate=2009-10-19}}</ref><ref name="GreenCar">{{cite web|url=http://www.greencarcongress.com/2009/10/forecast-17m-natural-gas-vehicles-worldwide-by-2015.html#more|title=Forecast: 17M Natural Gas Vehicles Worldwide by 2015|author=Pike Research|date=2009-10-19|publisher=[[Green Car Congress]]|accessdate=2009-10-19}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1031983" இருந்து மீள்விக்கப்பட்டது