சினெல்லின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விரிவு
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
 
'''சினெல்லின் விதி''' ([[ஆங்கிலம்]]: ''Snell's Law'') என்பது
[[ஒளியியல்|ஒளியியலில்]] '''சினெல்லின் விதி''' ([[ஆங்கிலம்]]: ''Snell's Law'') என்று அறியப்படும் விதியானது, ஓர் ஒளியூடுருவு ஊடகத்தில் இருந்து ஓர் ஒளிக்கதிர் மற்றொரு ஒளியூடுருவு ஊடகத்தில் பாயும் பொழுது, முதல் ஊடகத்தில் இருந்து ஒளி உள்புகும் கோணத்துக்கும், இரண்டாவது ஊடகத்தில் ஒளிவிலகல் நிகழும் ஊடகத்தில் ஒளிக்கதிரின் கோணத்துக்கும் இடையேயான ஒரு தொடர்பைக் கூறுவது ஆகும். சினெல்லின் விதி, '''சினெல்-டேக்கார்ட்டு விதி''' என்றும் '''ஒளிவிலகல் கோணவிதி''' என்றும் அழைக்கவும் படுகின்றது. இவ்விதி காற்றில் இருந்து நீரில் ஒளி புகும் பொழுதோ, ஒரு கண்ணாடியில் புகும் பொழுதோ வெளிவரும் பொழுதோ ஒளியின் பாதையை, நகரும் இயல்பை உணர உதவுவது. ஒளிப்படக் கருவி, [[இருகண்ணோக்கி]], தொலைநோக்கி போன்ற மிகப்பல ஒளியியல் கருவிகளில் இவ்விதி பயன்படுகின்றது.
[[Image:Snells law2.svg|thumb|இருவேறு ஊடகத்தைப் பிரிக்கும் தளத்தில் ஒளி பட்டு ஒளிவிலகல் நிகழ்தல். இருவேறு ஊடகங்களும் அவற்றின் ஒளிவிலகல் எண்கள் n<sub>2</sub> > n<sub>1</sub> என்று கொண்டால், ஒளியில் விரைவு இரண்டாவது ஊடகத்தில் குறைவு என்பதால் (v<sub>2</sub> < v<sub>1</sub>), ஒளிவிலகும் கோணம், θ<sub>2</sub>, உள்ளே புகும்பொழுது உள்ள கோணம் θ<sub>1</sub> ஐ விடச் சிறியது, θ<sub>1</sub>; அதாவது விலகன் எண் அதிகம் உள்ள ஊடகத்தில் ஒளிக்கதிரரனது தளத்தின் செங்குத்துக்கோட்டிற்கு நெருக்கமாக அமையும்.]]
 
சினெல்லின் விதி என்ன கூறுகின்றது என்றால், ஓர் ஊடகத்தில் இருந்து உள்புகும் கதிரின் நுழைகோணம், இரண்டாவது ஊடகத்தில் ஒளி விலகும் விலகுகோணம், ஆகியவற்றின் [[சைன்]]களின் விகிதம் அவ்வூடகங்களில் ஒளி பாயும் விரைவுகளின் விகிதங்களுக்கு ஈடாகவும், அவ்வூடகங்களின் விலகல் எண்களுக்கு எதிர்விகிதமாகவும் இருக்கும். அதாவது
 
:<math>\frac{\sin\theta_1}{\sin\theta_2} = \frac{v_1}{v_2} = \frac{n_2}{n_1}</math>
 
மேலுள்ளதில் கோணம் <math>\theta</math> என்பது ஊடகத்தைப் பிரிக்கும் இடைப்பிரிவுத் தளத்தின் செங்குத்துக்கோட்டில் இருந்து அளப்பதாகும், விரைவு <math>v</math> நொடிக்கு எத்தனை மீட்டர் என்னும் அலகிலும், விலகல் எண், <math>n</math>, என்பது இயற்பியல் பண்பு இல்லா வெறும் எண் ஆகும்.
 
இந்த சினெல்லில் விதியை வேறு விதமாகவும் வருவிக்கலாம். அதாவது பெர்மாவின் விதிப்படி ஒளி ஒரு புள்ளியில் இருந்து மற்றோர் புள்ளிக்கு நகர்வதில் மிகக் குறைந்த நேரமே எடுக்கும் என்னும் கொள்கையின் வழி வந்ததாக நிறுவலாம்.
 
==மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சினெல்லின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது