"சென்னை மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
1784 ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியா சட்டம், மாகாண ஆளுனருக்குத் துணை புரிய சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஒரு நிருவாகக் குழுவை உருவாக்கியது. தொடக்கத்தில் இக்குழு நான்கு பேர் கொண்டதாக இருந்தது. அதில் இரு இந்திய குடிமைப் பணி உறுப்பினர்களும் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியரும், சென்னைப் படையின் முதற்பெரும் தளபதியும் அடங்குவர்.<ref name="provincialgeographiesofindiap181">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 181-2</ref> 1895 இல் சென்னைப் படை கலைக்கப்பட்டதால் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது.<ref name="provincialgeographiesofindiap181" /> [[இந்திய அரசுச் சட்டம், 1833]] இக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்டமியற்றும் அதிகாரத்தை ரத்து செய்தது. ஆளுனருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவாக மட்டும் அது செயல்படத் தொடங்கியது<ref name="sadasivanp17">[[#Sadasivan|Sadasivan]], pp 17</ref> இந்திய கவுன்சில் சட்டம், 1861 நீக்கப்பட்ட இந்த அதிகாரத்தை மீண்டும் நிருவாகக்குழுவுக்கு வழங்கியது.<ref name="sadasivanp17" /> அடுத்த பல பத்தாண்டுகளில் பல முறை விரிவுபடுத்தப்பட்டது. 1920 இல் நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|சட்டமன்றம்]] ஒன்று உருவாக்கப்பட்டது. 1937 இல் சட்டமன்றம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஈரங்க அவையாக மாறியது.
 
1640 இல் கிழக்கிந்திய நிறுவனம் மதராசப்பட்டினம் கிராமத்தை வாங்கியதிலிருந்து சென்னை மாகாணத்தின் வரலாறு துவங்குகிறது.<ref name="officialadministrationp21">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 21</ref> அடுத்து 1690 இல் புனித டேவிட் கோட்டை வாங்கப்பட்டது. 1763 இல் வாங்கப்பட்டச் செங்கல்பட்டு மாவட்டம் (அக்காலத்தில் செங்கல்பட்டு ஜாகிர் எனப்பட்டது) சென்னை மாகாணத்தின் முதல் மாவட்டமானது.<ref name="officialadministrationp21" /> 1792 இல் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானுக்கும்]] கிழக்கிந்திய நிறுவனத்துக்குமிடையே ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் ஒப்பந்தத்தை அடுத்து மலபார் மற்றும் சேலம் மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. 1799 இல் [[நான்காம் மைசூர்ப் போர்|நான்காம் மைசூர்ப் போரில்]] திப்புவை வென்ற ஆங்கிலேயப் படைகள் கனரா மற்றும் கோயமுத்தூர் மாவட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைத்தன.<ref name="officialadministrationp22">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 22</ref> 1799 இல் தஞ்சாவூர் மராட்டிய இராச்சியத்தின் பகுதிகள், சென்னை மாகாணத்தின் அங்கமாகின. 1800 இல் ஐதராபாத் நிசாம் ஆங்கிலேயருக்குக் கொடுத்த பகுதிகள் பெல்லாரி மற்றும் கடப்பா மாவட்டங்களாக மாறின.<ref name="officialadministrationp21" /> 1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன.<ref name="officialadministrationp21" /> ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது. பின் தனி மாவட்டமாக மீண்டும் மாற்றப்பட்டது. 1823 இல் ராஜமுந்திரி, மசூலிப்பட்டனம்மச்சிலிப்பட்டினம் மற்றும் குண்டூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.<ref name="officialadministrationp20">[[#Official Administration of the Madras Presidency|Official Administration of the Madras Presidency]], Pg 20</ref> 1859 இல் இம்மூன்று மாவட்டங்களும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களாகப் புனரமைக்கப்பட்டன.<ref name="officialadministrationp20" /> 1925 இல் கோதாவரி மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1839 இல் குர்னூல் அரசு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு தனி மாவட்டமானது.<ref name="officialadministrationp21" /> 1859 இல் கனரா மாவட்டம் நிருவாக இலகுக்காக தென் கனரா, வட கனரா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் வட கனரா [[மும்பை மாகாணம்|மும்பை மாகாணத்துடன்]] 1862 இல் இணைக்கப்பட்டது. 1860களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.<ref name="officialadministrationp21" /> 1868 இல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.<ref name="officialadministrationp22" /> 1908 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 24 மாவட்டங்கள் இருந்தன.<ref name="provincialgeographiesofindiap181" /> ஒவ்வொரு மாவட்டமும் [[இந்தியக் குடிமைப் பணி]]யைச் சேர்ந்த ஒரு மாவட்ட ஆட்சியரால் நிருவாகம் செய்யப்பட்டன. சில மாவட்டங்கள் மேலும் பிரிக்கப்பட்டு அப்பிரிவுகள் துணை ஆட்சியர் ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டன. மாவட்டப் பிரிவுகள் மேலும் [[தாலூகா]], பஞ்சாயத்து ஒன்றியங்கள் அல்லது கிராமக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அடிக்கடி கலகங்கள் ஏற்பட்டு வந்த பகுதிகள் தனி முகமைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை மாகாணத்தில் இருந்த இரு முக்கிய முகமைகள் - விசாகப்பட்டினம் மலைப்பகுதிகள் முகமையும் கஞ்சம் மலைப்பகுதிகள் முகமையும் ஆகும். முன்னது விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரது கட்டுப்பாட்டிலும் பின்னது கஞ்சம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. 1936 ஆம் ஆண்டு இவ்விரு முகமைகளும் மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஒரிசா]] மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமிடையே பங்கிடப்பட்டன.
 
சென்னை மாகாணத்தின் அதிகாரத்துக்கு ஐந்து மன்னர் அரசுகள் ([[சமஸ்தானம்|சமஸ்தானங்கள்]]) இருந்தன. அவையாவன பங்கனப்பள்ளி, கொச்சி, [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]], சந்தூர் மற்றும் திருவிதாங்கூர்.<ref name="provincialgeographiesofindiap1">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 1</ref> இவ்வரசுகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் அவற்றின் வெளியுறவுக் கொள்கை, சென்னை ஆளுனரின் பிரதிநிதி ஒருவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது.<ref name="provincialgeographiesofindiap183">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 183</ref> இவ்வாறு பங்கனப்பள்ளி அரசின் கொள்கைப் பிரதிநிதியாக குர்னூல் மாவட்ட ஆட்சியரும் சந்தூரின் வெளியுறவுக் கொள்கைப் பிரதிநிதி பெல்லாரி மாவட்ட ஆட்சியரும் இருந்தனர்.<ref name="macleanp63">[[#MaClean|MaClean]], Pg 63</ref><ref name="macleanp65">[[#MaClean|MaClean]], Pg 65</ref> 1800-45 மற்றும் 1865-73 காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டையின் வெளியுறவுத் துறைப் பிரதிநிதியாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அப்பொறுப்பு மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1873 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அப்பொறுப்பைப் பெற்றிருந்தார்.<ref name="imperialgazetteerofindia1908v20p232">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 20, Pg 232</ref>
சென்னை மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தகத்தில் 93% வெளிவர்த்தகம் (பிற மாநிலங்களுடனும் நாடுகளுடனும்). எஞ்சிய 7 % உள்வர்த்தகம்.<ref name="imperialgazetteerofindiap297">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], Pg 297</ref> வெளி வர்த்தகத்தில் 70 % பிற நாடுகளுடனான வர்த்தகம், 23 % பிரித்தானிய இந்தியாவின் பிற மாகாணங்களுடன் நடைபெற்ற வர்த்தகம்.<ref name="imperialgazetteerofindiap297" /> 1900&ndash;01, இல் பிற மாகாணங்களில் இருந்து ரூ. 13.43 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பிற மாகாணங்களுக்கு ரூ. 11.52 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே ஆண்டு பிற நாடுகளுக்கு ரூ 11.74 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன; பிற நாடுகளில் இருந்து ரூ 6.62 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.<ref name="imperialgazetteerofindia1908v16p354">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], 1908, Vol 16, Pg 354</ref> இந்தியா விடுதலை அடைந்த போது மாகாணத்தின் இறக்குமதிகளின் மதிப்பு ரூ 71.32 கோடியாகவும் ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 64.51 கோடியாகவும் இருந்தன.<ref name="statesmanp175" /> மாகாணத்தின் மொத்த வர்த்தகத்தில் 31.54 % ஐக்கிய இராச்சியத்துடன் நடைபெற்றது. வர்த்தகத்தில் 49% சென்னை நகரின் துறைமுகம் வழியாக நடைபெற்றது.<ref name="statesmanp175" />
 
பருத்தித் துணித்துண்டுகள், நூல், உலோகங்கள், மண்ணெண்ணை ஆகியவை முக்கிய இறக்குமதிப் பொருட்கள். விலங்குத் தோல்கள், பஞ்சு, காபி, துணித்துண்டுகள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். கடல் வழி வணிகத்தின் பெரும் பகுதி சென்னை நகரத் துறைமுகத்தின் மூலம் நடைபெற்றது. கோபால்பூர், காளிங்கப்பட்டனம், பீம்லிபட்டனம், கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டனம், மசூலிப்பட்டனம்மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா, கடலூர், பாம்பன், தூத்துக்குடி ஆகியனவும் மேற்குக் கடற்கரையில் மங்களூர், கண்ணனூர், கோழிக்கோடு, தளிச்சேரி, கொச்சி, ஆலப்புழா, கொல்லம், குளச்சல் ஆகியனவும் சென்னை மாகாணத்தின் பிற முக்கிய துறைமுகங்களாக இருந்தன.<ref name="imperialgazetteerofindiap297" /><ref name="provincialgeographiesofindiap43">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 43</ref><ref name="provincialgeographiesofindiap36">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 36</ref> ஆகஸ்ட் 1, 1936 முதல் இந்திய அரசே கொச்சித் துறைமுகத்தின் நிருவாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியது. அது போல் ஏப்ரல் 1, 1937 முதல் சென்னைத் துறைமுகமும் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது.<ref name="statesmanp175" /> சென்னை, கொச்சி மற்றும் காக்கிநாடாவில் வர்த்தகர் சங்கங்கள் இயங்கி வந்தன.<ref name="imperialgazetteerofindiap298">[[#The Imperial Gazetteer of India|Imperial Gazetteer of India]], Pg 298</ref> இவை சென்னை சட்டமன்றத்துக்கு தலா ஒரு நியமன உறுப்பினரைப் பரிந்துரை செய்யும் உரிமையும் பெற்றிருந்தன.<ref name="imperialgazetteerofindiap298" />
 
பருத்திக் கொட்டை நீக்குதலும், நெய்தலும் சென்னை மாகாணத்தின் இரு முக்கிய தொழில்கள். பெல்லாரி மாவட்டத்தில் அதிக அளவில் விளைந்த பருத்தி சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் அழுத்தப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap208">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 208</ref> [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] காரணமாக இங்கிலாந்து, லங்கசயரில் பருத்தித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்ப்பற்றாக்குறையை ஈடு செய்ய சென்னை மாகாணமெங்கும் பருத்தி பயிரிடலும் பருத்தி அழுத்திகளை இயக்குவதும் ஊக்குவிக்கப்பட்டன.<ref name="provincialgeographiesofindiap208" /> 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கோயமுத்தூர் பகுதி பருத்தி சார் தொழில்களின் முக்கிய மையமாகியது; ”தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்ற பட்டத்தையும் பெற்றது. <ref name="coimbatore_history">{{cite web|url=http://www.coimbatore.com/history.htm|title=Histpry of Coimbatore|accessdate=2008-11-14|publisher=Emerging Planet India Pvt. Ltd.}}</ref><ref name="sica">{{cite web|url=http://www.sicacoimbatore.com/history.html|title=History|accessdate=2008-11-14|publisher=South Indian Cotton Association}}</ref> கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா போன்ற வட மாவட்டங்களிலும் பருத்தி நெய்தல் பெருமளவில் நடைபெற்றது. கஞ்சம் மாவட்டத்தில் அஸ்கா என்னுமிடத்திலும் தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பத்திலும் சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.<ref name="provincialgeographiesofindiap210">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 210</ref> தெலுங்கு பேசும் வட மாவட்டங்களில் பெருமளவில் விளைந்த [[புகையிலை]]யில் இருந்து [[சுருட்டு]]கள் தயாரிக்கப்பட்டன.<ref name="provincialgeographiesofindiap211">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 211</ref> திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகியவை முக்கிய சுருட்டு தயாரிப்பு தொழில் மையங்கள்.<ref name="provincialgeographiesofindiap211" /> செயற்கை [[அனிலீன்]] மற்றும் [[அலிசாரீன்]] சாயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, சென்னை மாகாணத்தில் இயற்கைச் (காய்கறி) சாயத் தொழில்துறை நன்கு இயங்கி வந்தது.<ref name="provincialgeographiesofindiap211" /> அலுமினியக் கலன்கள் செய்வதற்காகப் பெருமளவில் [[அலுமினியம்]] இறக்குமதி செய்யப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap212">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 212</ref> உயர்ரகத் தோல்பொருட்களை உற்பத்தி செய்ய 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒரு குரோம் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அரசு நிறுவியது.<ref name="provincialgeographiesofindiap213">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 213</ref> 1826ம் ஆண்டு மாகாணத்தின் முதல் மது வடிப்பாலை நீலகிரியில் தொடங்கப்பட்டது;<ref name="provincialgeographiesofindiap213" /> வயநாடு, குடகு, மைசூர்ப் பகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap214">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 214</ref> நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் டீ பயிரிடப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap216">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 216</ref> திருவிதாங்கூரிலும் காப்பித் தோட்டங்கள் இருந்தன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒரு கருகல் நோய்த் தாக்குதலால் அவை அழிந்து போயின.<ref name="provincialgeographiesofindiap214" /> காப்பி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கோழிக்கோடு, தளிச்சேரி, மங்களூர், கோயமுத்தூர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன.<ref name="provincialgeographiesofindiap216" /> 1947 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 3,761 ஆலைகளும் 2,76,586 தொழிலாளர்களும் இருந்தனர்.<ref name="statesmanp175" />
609

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1033942" இருந்து மீள்விக்கப்பட்டது