"சென்னை மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நீர்ப்பாசனத்துக்காக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளும், ஏரிகளும், பாசனக் குளங்களும் பயன்படுத்தப்பட்டன. மேற்கில் கோவை மாவட்டத்தில் குளங்களே நீர்ப்பாசனத்துக்குப் பெரிதும் பயன்பட்டன.<ref name="provincialgeographiesofindiap200"/>
 
1884ம் ஆண்டு இயற்றப்பட்ட நில விருத்தி மற்றும் வேளாண் கடன் சட்டம், கிணறுகள் வெட்டி தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க நிதி ஒதுக்கீடு செய்தது.<ref name="imperialgazetteer1908v16p278">[[#The Imperial Gazetteer of India|The Imperial Gazetteer of India, 1908]], Vol 16, Pg 278</ref> 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மின் [[ஏற்றி]]களைக் கொண்டு நீரிறைக்க ஒரு தனி அரசுத்துறை உருவாக்கப்பட்டது..<ref name="provincialgeographiesofindiap202">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 202</ref> [[மேட்டூர் அணை]],<ref name="goughp130">[[#Gough|Gough]], Pg 130</ref> [[முல்லைப்பெரியாறு அணை]], கடப்பா-குர்நூல்கர்நூல் கால்வாய், ருசிகுல்யாத் திட்டம் போன்றவை சென்னை மாகாண அரசு மேற்கொண்ட பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களில் சில. 1934 இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை மாகாணத்தின் மேற்கு மாவட்டங்களின் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லையில் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை [[பெரியாறு]] நீரை [[வைகை]] வழியாக தென் மாவட்டங்களுக்குத் திருப்பிவிட்டது.<ref name="provincialgeographiesofindiap203">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 203</ref> கஞ்சம் மாவட்டத்தில் பாய்ந்த ருசிகுல்யா ஆற்று நீரைப் பயன்படுத்த ருசிகுல்யா திட்டம் தொடங்கப்பட்டது.<ref name="provincialgeographiesofindiap205">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 205</ref> இதன் மூலம் 1,42,000 நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிட்டியது.<ref name="provincialgeographiesofindiap205" /> இவை தவிர பல அணைக்கட்டுகளையும் கால்வாய்களையும் மாகாண அரசு கட்டியது. [[திருவரங்கம்]] தீவு அருகே [[கொள்ளிடம்|கொள்ளிடத்தின்]] குறுக்கே ஒரு [[மேலணை|அணை]], [[கோதாவரி]] ஆற்றின் குறுக்கே தௌலேசுவரம் அணை, வைநேத்யம் கோதாவரியில் நீர்க்கட்டுக் கால்வாய், குர்நூல்கர்நூல்-கடப்பா கால்வாய், மற்றும் [[கிருஷ்ணா அணை]] ஆகியவை மாகாண அரசால் கட்டப்பட்ட பெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள்.<ref name="provincialgeographiesofindiap206">[[#Provincial Geographies of India|Provincial Geographies of India]], Pg 206</ref><ref name="imperialgazetteer1908v16p276" /><ref name="provincialgeographiesofindiap205" /> 1946&ndash;47, காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 97,36,974 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. அரசு நீர்ப்பாசனத்தில் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.94% வருவாய் கிட்டியது.<ref name="statesmanp175">[[#Statesman|Statesman]], Pg 175</ref>
 
==வர்த்தகமும் தொழிற்துறையும்==
609

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1033943" இருந்து மீள்விக்கப்பட்டது