இயற்கை எரிவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 61:
* உர உற்பத்திக்குத் தேவையான [[அம்மோனியா]]வைத் தயாரிக்கவும் முக்கிய ஆரம்பப் பொருளாக இயற்கை எரிவளி விளங்குகிறது.
* மெத்தனால் தயாரிக்கவும் இயற்கை எரிவளி பயன்படுகிறது. மெத்தனாலுக்குத் தொழிற்சாலையில் பல பயன்கள் உண்டு. உதாரணத்திற்கு, காற்றில் உள்ள ஈரப்பசையை நீக்குவதற்குப் பல நெகிழி, மருந்துத் தொழிற்சாலைகளில் மெத்தனாலைப் பயன்படுத்துவர்.
 
== சூழல் தாக்கங்கள் ==
 
புதைபடிவ எரிபொருட்களில், பாறைநெய், கரி போன்றவற்றைக் காட்டிலும், இயற்கை எரிவளி தூய்மையான எரிபொருளாகக் கருதப் படுகிறது. ஒரே [[ஜூல்]] அளவு வெப்பத்தை உண்டாக்க, கரி, எண்ணெய்யை விட இயற்கை எரிவளி குறைவான [[கார்பன் டை ஆக்சைடு]] வெளியிடுகிறது.
ஆனால், மொத்தக் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கணக்கிடும்போது இயற்கை எரிவளியும் கணிசமான அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் ஒன்று. 2004 கணக்கில் கரி, எண்ணெய், எரிவளி ஆகிய மூன்றும் முறையே 10.6, 10.2, 5.6 பில்லியன் டன் அளவில் கார்பன் டை ஆக்சைடி வெளியிட்டிருக்கின்றன. வரும் காலத்தில் இயற்கை எரிவளியின் பயன்பாடு அதிகரிக்கும் எனவும் அனுமானிக்கப் படுகிறது. அதனால் உலக வெப்பேற்ற வளிகளின் அளவும் அதிகரிக்கலாம்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எரிவளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது