பிளாஸ்மோடியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:நுண்ணுயிர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 42:
பெண் அனபிலஸ் கொசுக்கள் முதுகெலும்பிகளைக் கடிக்கும் பொழுது, அதன் [[உமிழ் நீர்]] வழியாக ஆயிரக்கணக்கான கதிர்வடிவ [[ஸ்போரோசோயிட்]]டுக்கள் [[இரத்தம்|இரத்ததில்]] கலக்கின்றன. பின்பு, [[கல்லீரல்|கல்லீரலின்]] உட்புறமுள்ள ''ரெட்டிகுலோ எண்டோதீலியல்'' (''reticuloendothelial'') [[செல்]]களில் தங்குகின்றன. இங்கு அமைதியாக தங்கியிருக்கும் ஸ்போரோசோயிட்டுக்கள் ஹிப்னோசோயிட் என அழைக்கப்படுகிறது.
 
கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, [[பாலில்லாபாலினமற்ற இனப்பெருக்கம்| பாலில்லா இனப்பெருக்க]]முறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய [[மீரோசோயிட்டு]]களாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.
 
[[சிவப்பணு]]க்களுள், இவை டிரோபோசோயிட்டுகளாக வளர்கின்றன. இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது. இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. பல மீரோசோயிட்டுகள் இந்த சுழற்சியில் மேலும் பெருக்கின்றன. பல சுழற்சிக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் கேமிட்டோசைட்டுகளாக (''gametocyte'') உருப்பெறுகின்றன. இந்த கேமிட்டோசைட்டுகள் கொசுக்களால் உறிஞ்சப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பிளாஸ்மோடியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது