நகர்ப்புற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
==வலய மாதிரி==
நகர்ப்புறப் பகுதிகளில் பல்வேறு சமூகக் குழுக்களின் பரம்பல் குறித்து முதன்முதலில் விளக்கியது இதுவே ஆகும். 1924 ஆம் ஆண்டில் [[ஏர்னெஸ்ட்டு புர்கெசு]] (Ernest Burgess) என்னும் சமூகவியலாளர், [[சிக்காகோ]] என்னும் தனியொரு நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரியை உருவாக்கினார். இந்த மாதிரியின்படி, நகரங்கள் ஒரு மையப் புள்ளியில் இருந்து வெளிப்புறமாகப் புதிய வளையங்கள் சேர்வதன் மூலம் வளர்கின்றன. இதன் மையப்பகுதி [[மைய வணிகப் பகுதி]] ஆகும். இதைச் சூழவுள்ள அடுத்த வளையம் மாறுநிலை வலயம் எனப்படும். இவ்வலயத்துள் தொழிற்சாலைகளும், தரக்குறைவான வீடமைப்புப் பகுதிகளும் இருக்கும். இதற்கு வெளிப்புறமாக அடுத்துள்ள வலயத்தில் தொழிலாள வகுப்பினரின் குடியிருப்புப் பகுதிகளைக் காணலாம். இதைக் கட்டற்ற தொழிலாளர் வீட்டு வலயம் என்பர். அடுத்துள்ள வளையம் புதியனவும், பெரியவையுமான வீடுகளைக் கொண்டிருக்கும். இதில் பெரும்பாலும் இடைநிலை வகுப்பினர் வாழ்வர். இதை "நல்ல வதிவிட வலயம்" என்றும் அழைப்பதுண்டு. கடைசியாகக் காணும் வளையத்தினுள் அன்றாடம் நகரின் மையப் பகுதியில் உள்ள வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வசிக்கும் [[புறநகர்]]ப் பகுதிகள் அமையும்.
 
==ஆரைத்துண்டு மாதிரி==
நகர்ப்புற அமைப்புக் குறித்த இந்த இரண்டாவது கோட்பாட்டு மாதிரி 1939 ஆம் ஆண்டில் பொருளியலாளரான [[ஓமெர் ஓயிட்]] (Homer Hoyt) என்பாரால் முன்வைக்கப்பட்டது. ஆரைத்துண்டு மாதிரி என்னும் இந்த மாதிரி, நகரங்கள் வளைய அமைப்பில் வளர்வதில்லை என்றும், ஆரைத்துண்டு அமைப்பிலேயே வளர்கின்றன என்றும் கூறுகிறது. தற்செயலாகவோ, அல்லது புவியியல், சூழல் காரணங்களாலோ நகரத்தில் சில பகுதிகள் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமைகின்றன. இதனால் அக் குறிப்பிட்ட இடங்களில் நிலைகொள்ளும் அந்நடவடிக்கைகள், நகரங்கள் வளரும்போது வெளிப்புறமாக ஒரு ஆரைத்துண்டு வடிவில் வளர்கின்றன. எடுத்துக்காட்டாக ஒரு குறித்த பகுதியில் உயர் வருவாயுள்ளோரின் குடியிருப்பு அமைந்தால், அது வளரும்போது நகர மையத்துக்கு எதிர்ப்புறமாகவுள்ள வெளி விளிம்பில் இருந்தே விரிவடையும்.
 
 
 
[[பகுப்பு:நகர்ப்புறம்]]
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது