நகர்ப்புற அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
வலைவடிவத் தளவமைப்பு அல்லது வலைவடிவச் சாலைத் தளவமைப்பு என்பது ஒரு வகையான நகரத் தளவமைப்பைக் குறிக்கும். இதில் ஒன்றுக்கொன்று இணையான ஒரு தொகுதி சாலைகளும், அவற்றுக்குச் செங்குத்தான இன்னொரு தொகுதிச் சாலைகளும் ஒன்றையொன்று வெட்டுவதனால் வலை போன்ற தளவமைப்பு உருவாகிறது.
 
==ஒருமைய வலய மாதிரி==
நகர்ப்புறப் பகுதிகளில் பல்வேறு சமூகக் குழுக்களின் பரம்பல் குறித்து முதன்முதலில் விளக்கியது இதுவே ஆகும். இதை "ஒருமைய வளைய மாதிரி" என்றும் குறிப்பிடுவது உண்டு. 1924 ஆம் ஆண்டில் [[ஏர்னெஸ்ட்டு புர்கெசு]] (Ernest Burgess) என்னும் சமூகவியலாளர், [[சிக்காகோ]] என்னும் தனியொரு நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த மாதிரியை உருவாக்கினார். இந்த மாதிரியின்படி, நகரங்கள் ஒரு மையப் புள்ளியில் இருந்து வெளிப்புறமாகப் புதிய வளையங்கள் சேர்வதன் மூலம் வளர்கின்றன. இதன் மையப்பகுதி [[மைய வணிகப் பகுதி]] ஆகும். இதைச் சூழவுள்ள அடுத்த வளையம் மாறுநிலை வலயம் எனப்படும். இவ்வலயத்துள் தொழிற்சாலைகளும், தரக்குறைவான வீடமைப்புப் பகுதிகளும் இருக்கும். இதற்கு வெளிப்புறமாக அடுத்துள்ள வலயத்தில் தொழிலாள வகுப்பினரின் குடியிருப்புப் பகுதிகளைக் காணலாம். இதைக் கட்டற்ற தொழிலாளர் வீட்டு வலயம் என்பர். அடுத்துள்ள வளையம் புதியனவும், பெரியவையுமான வீடுகளைக் கொண்டிருக்கும். இதில் பெரும்பாலும் இடைநிலை வகுப்பினர் வாழ்வர். இதை "நல்ல வதிவிட வலயம்" என்றும் அழைப்பதுண்டு. கடைசியாகக் காணும் வளையத்தினுள் அன்றாடம் நகரின் மையப் பகுதியில் உள்ள வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வசிக்கும் [[புறநகர்]]ப் பகுதிகள் அமையும்.
 
==ஆரைத்துண்டு மாதிரி==
"https://ta.wikipedia.org/wiki/நகர்ப்புற_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது