வையாபுரி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''வையாபுரி''' ஒரு நகைச்சுவை நடிகர். [[தேனி]] அருகிலுள்ள முத்துத்தேவன்பட்டி எனும் ஊரைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன். இவர் எட்டாம் வகுப்பு வரை முத்துத்தேவன் பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை [[பழனிசெட்டிபட்டி]], [[பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளியிலும்பள்ளி]]யிலும் படித்தார். அதன் பின்பு தேனியிலுள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். திரைப்படத்துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் சென்னைக்குச் சென்ற இவர் முதலில் திரைப்படத்துறையில் பல வேலைகளைச் செய்தார். சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சின்ன மருது பெரிய மருது”, “மால்குடி டேஸ்” போன்ற தொடர்களில் நடிக்கத் தொடங்கிய இவரை “இளைய ராகம்” எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் விவேக் நடிக்க வைத்தார். அதன் பிறகு “துள்ளாத மனமும் துள்ளும்” படத்தில் [[திருநங்கை]] வேடத்தின் மூலம் பெயர் பெற்றார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 250 படங்களுக்கும் மேல் நகைச்சுவை நடிகராக நடித்து விட்டார். [[2001]] ஆம் ஆண்டில் ஆனந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வையாபுரி_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது