வையாபாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''வையாபாடல்''' என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும், தொடர்ந்து வரும் பல இடங்களிலும், இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளெனக் காணினும், இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த '''வையா''' என்னும் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் [[மயில்வாகனப் புலவர்|மயில்வாகனப் புலவரால்]] எழுதப்பட்ட [[யாழ்ப்பாண வைபவமாலை]] என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலானது 104 செய்யுள்களினாலானது.
 
==நூலாசிரியர்==
இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றிக் கூறும் பாடலிலே, "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் "வையா" என்பதாகுமெனெக் கருதப்படுகிறது.
 
==காலம்==
"https://ta.wikipedia.org/wiki/வையாபாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது