இராமகிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: as:ৰামকৃষ্ণ পৰমহংস
→‎இளமை: எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 5:
== வாழ்க்கை ==
=== இளமை ===
கதாதர், குதிராம் - சந்திரமணி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்திலுள்ள]] கமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு [[கணிதம்]] பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நன்பர்களுடன்நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
 
[[File:தட்சணேஸ்வரம் காளி கோயில்.JPG|thumb|தட்சணேஸ்வரம் காளி கோயில்]]
 
=== தட்சினேஸ்வரத்தில் ===
ராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணன் ராம்குமார் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த [[தட்சினேஸ்வர் காளி கோயில்|தட்சினேஸ்வர் காளி கோயிலிலும்]] புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ராமகிருஷ்ணர், [[காளி]] கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் [[கங்கை]]க் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது