இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[இந்திய விடுதலைப் போராட்டம்]] பெரும்பாலும் வன்முறையற்ற அறிவழிப் போராட்டமாக இருந்தது. இருப்பினும் ஆயுதமேந்திய புரட்சி இயக்கங்கள் அதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. வன்முறையின் துணையுடன் பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க முயன்ற இவ்வியக்கங்கள் வங்காளம், பஞ்சாப், பீகார், மகாராட்டிரம், உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் தீவிரமாக இயங்கி வந்தன. இந்தியாவுக்கு வெளியிலிருந்தும் சில புரட்சி இயக்கங்கள் செயல்பட்டு வந்தன. [[யுகாந்தர்]], [[அனுசீலன் சமித்தி]], [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு]], [[கதர் கட்சி]] போன்றவை இத்தகைய புரட்சி இயக்கங்களில் குறிப்பிடத்தக்கவை.
 
19ம் நூற்றாண்டின் பிறபகுதியில் [[பிரித்தானிய இந்தியா]]வில் மக்களிடையே தேசியவாத உணர்வுகள் பரவத்தொடங்கின. [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி இத்தேசிய எழுச்சிக்குத் தலைமை தாங்கியது. தொடக்கத்தில் காலனிய அரசிடம் முறையிட்டும், பேச்சுவார்த்தை நடத்தியும், ஆட்சியிலும் நிருவாகத்திலும் இந்தியர்களுக்கு உரிய பங்கைப் பெறுவதே காங்கிரசின் நோக்கமாக இருந்தது. நாளடைவில் காங்கிரசின் தலைமையிலான இயக்கம், இந்தியாவுக்கு தன்னாட்சியும் முழு விடுதலையும் கோரத் தொடங்கியது. இவ்வியக்கத்தினர் பெருமளவு அமைதியான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கோரிக்கைகள் விடுத்தல், இதழ்களில் செய்தி வெளியிடல் போன்ற வன்முறையற்ற வழிகளில் போராடினர். அதே காலகட்டத்தில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் பிரித்தானியரை இந்தியாவில் இருந்து வெளியேற்றவும் சில புரட்சி இயக்கங்கள் முயன்றன.
 
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்புரட்சி இயக்கங்கள் வேகமாக வளரத்தொடங்கின. [[வங்காளப் பிரிவினை]]யால் வங்காளத்திலும் அதன் அருகிலிருந்த பகுதிகளிலும் ஆயுதப் போராட்டம் புகழ்பெற்றது.
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}