நிலப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
நிலப் பயன்பாட்டு நடவடிக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக உள்ளன. நிலத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் உற்பத்திப் பொருட்கள், பயன்கள் என்பவை குறித்தும், இவ்வாறான உற்பத்திப் பொருட்களையும், பயன்களையும் உருவாக்குவதற்கு மனிதரால் எடுக்கப்படும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும் நிலப் பயன்பாடு என்னும் விடயம் அக்கறை காட்டுகிறது. 1990 ஆம் ஆண்டின் நிலைவரப்படி உலகில் 13% நிலப்பகுதி வேளாண்மைக்கு உகந்ததாக உள்ளது. இவற்றுடன் 26% புல்வெளிகளாகவும், 32% காடுகளாகவும், 1.5% நகர்ப்புறப் பகுதிகளாகவும் உள்ளன.
 
பல ஆண்டுகளுக்கு முன் [[ஆல்பர்ட் குட்டன்பர்க்]] கூறியபடி, நகரத் திட்டமிடலின் மொழியில் நிலப் பயன்பாடு என்பது முக்கியமானதொரு சொல் ஆகும். பொதுவாக, நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் அரசியல் அதிகார நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. நிலப் பயன்பாட்டு முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக நிலப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதும் இத் திட்டமிடலின் நோக்கமாகும். நிலப் பயன்பாட்டுத் திட்டங்கள் நில ஒதுக்கீடுகளூடாகவும், அரசாணைகள், ஒழுங்குவிதிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது மூலமும் நிறைவேற்றப் பெறுகின்றன.
 
==நிலப் பயன்பாடும் சூழலும்==
நிலப் பயன்பாடும், [[நில மேலாண்மை]]ச் செயற்பாடுகளும் [[நீர்]], [[நிலம்]], ஊட்டப் பொருட்கள், [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்கு]]கள் போன்ற இயற்கை வளங்கள் மீது பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. நிலப் பயன்பாட்டுத் தகவல்களை, உவர்த்தன்மை, [[நீரின் தரம்]] என்பவை தொடர்பான இயற்கை வள மேலாண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, [[காடழிப்பு]] அல்லது [[மண்ணரிப்பு]] ஏற்பட்ட இடங்களில் உள்ள [[நீர்நிலை]]களில் காணப்படும் நீரின் தரம், காடுகள் உள்ள பகுதியின் நீர்நிலைகளில் உள்ள நீரின் தரத்திலும் வேறுபட்டிருக்கும்.
 
[[பகுப்பு:நிலப் பயன்பாடு]]
"https://ta.wikipedia.org/wiki/நிலப்_பயன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது