வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
''வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ்'' (1929-1995) ஒரு அமெரிக்க கணினி விஞ்ஞானி மட்டுமல்ல, லாக்ஹீட் (Lockheed) நிறுவனத்தின் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகவும் பணிபுரிந்தவர். 20 ஆம் நூற்றாண்டின் மென்பொருள் உருவாக்கத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க தலைவரும் ஆவார்.
 
==அருவி மாதிரி==
 
அருவி மாதிரியை ஒரு 'மென்பொருள் மேம்பாட்டு முறையியலாக' முதன் முதலில் விவரித்தவர் இவரே ஆயினும், அவர் தனது கட்டுரையில் 'அருவி' என்னும் சொல்லை கையாளவோ அல்லது இந்த 'மாதிரி' நிச்சயமாக செயல்படும் என்று வாதிடவோ இல்லை.
 
==கல்வி மற்றும் வேலை==
 
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரியில் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய அவர், அங்கு இயற்பியலில் இளநிலைப் பட்டத்தையும், வானூர்தி பொறியியலில் முதுகலை பட்டத்தையும் பெற்றார். இறுதியாக ஜூலியன் டேவிட் கோலின் கீழ் வானூர்தி பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
35 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல், ஆராய்ச்சி, கற்பித்தல், மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றினார். 1970ல் இருந்து அவர் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரிலுள்ள லாக்ஹீட் மென்பொருள் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனராகப் பணியாற்றியவர். 1975ல் அவர் ''AIAA தகவல் அமைப்புகள் விருது'' பெற்றவர்.
 
ஜூன் 7, 1995 இல், வெர்ஜினியா மாநிலம் கிளிஃப்டன் நகரிலுள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.
 
 
[[en:Winston W. Royce]]
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_டபிள்யூ._ராய்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது