படல மறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''படல மறை''' ([[ஆங்கிலம்]]: ''Film Negative'') என்பது நிலைத்த ஒளிப்படக் கருவியில் ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படலம் ஆகும். இது [[நெகிழி]]யால் செய்யப்பட்டிருக்கும். அத்தோடு, இதன் மீது ஒளி உணர் ஹாலைடு உப்புக்கள் கொண்ட திரவக் குழம்பு பூசப்பட்டிருக்கும். இந்தத் திரவக் குழம்பின் மீது தேவையான அளவு ஒளி பட்டவுடன் படல மறையில் மறை விம்பம் உருவாகும். சில இரசாயனச்வேதியியல் செயன்முறைகள் மூலம் புலனுறு பிம்பத்தைப் பெற முடியும்.
 
கறுப்பு வெள்ளைப் படல மறையில் வெள்ளி உப்புக்கள் ஒரே படையில் காணப்படும். அதே நேரத்தில் நிறப் படலத்தில் குறைந்தது மூன்று படைகளாவது காணப்படும். கோடகலோர் 2 போன்ற நவீன நிறப் படலங்களில் 12 திரவக் குழம்புப் படைகள் காணப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு படையிலும் 20 வெவ்வேறு வேதியியல் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.
 
ஒளிப்படவியலின் நீண்ட வரலாறு காரணமாகப் படல மறையில் அல்லது ஒளிப்படத் தாளில் இது வரை ஏறத்தாழ ஒரு கற்பம் ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றின் மூலம் ஏறத்தாழ 10000 சதுர கிலோமீற்றர் (4000 சதுர மைல்) பிரதேசத்தை (வேல்சின் அரைவாசி) மறைக்க முடியும்.
 
==
"https://ta.wikipedia.org/wiki/படல_மறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது