பேச்சு:ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இன்றைய ஊடகப் போக்குக்கு எழுதுவது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது. --~~~~
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 36:
 
:கம்பர் பாட்டில் விபரீதம் என்னும் சொல் இருக்கிறதா? ஆச்சர்யமான தகவல் தான். பாடலை மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும். இங்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவன எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை. இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே? தற்பொழுதைய பொது ஊடகங்களில் பரவலாக ஆங்கிலம் கலக்கப்படுகிறது. 4, 5 நூற்றாண்டுகள் கழித்து வாதாடுபவர்கள் 2000ஆவது ஆண்டு வாக்கில் கம்ப்யூட்டர், பஸ் போன்றவெல்லாம் தமிழ்ச் சொற்களாக இருந்தன. அவற்றை பயன்படுத்தலாம் என்று வாதிடுதல் முறையா? அது போலவே முற்கால இலக்கியங்களிலும் ஜெயகாந்தன் போன்றோரின் தற்கால இலக்கியங்களிலும் பிற மொழிச் சொல் கலப்பு இருக்கத் தான் செய்யும். அதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. துல்லியமான சொல் தேடும் நீங்கள் ஏன் அதை வடமொழிச் சொற்களில் இருந்தே தேடுகிறீர்கள்? பிற மொழி கலக்காத முற்சங்க காலத்து இலக்கியங்களிலிருந்து சொற்கள் தேட முயலலாம். இல்லை, சரியான சொல் இல்லாத போது வேர்ச்சொல்லில் இருந்து புதுச் சொல் ஆக்க முயலலாம். திசைச் சொற்களை ஏற்பது குறித்து தமிழில் இலக்கணமே இருக்கிறதென்றால் அது குறித்து ஒரு ஒழுங்குடன் செயல்பட வேண்டும் என்று பொருள் தானே? ஆங்கிலம் போல் எங்கிருந்து வேண்டுமானாலும் சொற்களை எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு இலக்கணம் எதற்கு? கலைக்களஞ்சியம் இன்றுள்ளவர் தவிர நூற்றாண்டுகள் கழித்தும் வாசிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அனைவருக்கும் எக்காலத்திலும் புரியும் நற்றமிழில் எழுதுவது தான் நன்றாக இருக்கும். இன்றைய ஊடகப் போக்குக்கு எழுதுவது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது.. --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 03:29, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
 
ரவி, விபரீதம் தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம், பிங்களம், திருவாய்மொழி, அகவல், வேதாந்த சூத்திரம் போன்ற இலக்கியங்களில் வருகிரது [http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&display=utf8&table=tamil-lex]. அதனால்தான் தமிழ் கூகிளில் போட்டால், 1000 பக்கங்கள் வரலாம். பழந்தமிழில் அது 'முரண்' என்ற பொருளில் வருகிரது, தற்கால செய்திகளில் வேண்டாத சம்பவம், traffic accident போன்ற பொருளில்.
 
விபரீதம் (p. 3680) [ viparītam ] n viparītam . < vi-parīta. 1. Discordance; contrariety; perversity; மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர். (கம்பரா. மாயாசன. 2). 2. Unfavourableness; பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.) 3. Strangeness, uncommonness; அதிசயம். (திவா.). 4. See விபரீதஞானம். சீவபாவமுண்டெனல் விபரீதமாம் (வேதா. சூ. 129). 5. cf. a-parimita. Excessiveness; மிகுதி. (அரு. நி.).
 
 
"இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே?"
 
இதற்கு நான்கு ஆட்சேபணைகள் .
ஒன்று "நல்ல தமிழ்ச் சொல் எது" என்பது கண்டுபிடிப்பது. பரவான சொல்லாட்சி நல்ல தமிழா? தமிழிலக்கியத்தில் இருப்பது நல்ல தமிழா? பி.பி.சி.யில் பயனாகும் தமிழ் நல்லதா?அல்லது தினத்தந்தி தமிழா? அல்லது கூகிளில் அதிகமாக பலன் கொடுப்பதா? திண்ணையில் இருக்கும் தமிழா? இலங்கை அரசு உபயோகிக்கும் தமிழா? காலேஜ் மாணவர்கள் தமிழா? சென்னை தமிழா? அல்லது அகராதிகளில் வரும் தமிழா?அகராதிகளில் இல்லாத தமிழை நாம் முழுக்க புறக்கணிப்பது உசிதமா?
இரண்டாவது ஆட்சேபணை இதனால் நாம் கட்டுரை சம்பந்தமான ஆராய்ச்சிகளையும், முயற்சிகளையும் விட்டு, மொழி சம்பந்தமான ஆராய்ச்சிகளிளும், வேண்டாத சர்ச்சைகளிலும் நேரத்தை வீண்படுத்துவோம்.
அதனால் சராசரி கட்டுரை ஆசிரியன் குறுகிய காலத்தில் புரியும் சொற்களையும், நடைமுறையையும் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுத வேண்டும். அதற்கு மொழி சர்ச்சைகளை தவிற்க வேண்டும்.
நான்காவது, நீங்களே "மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில்" என்று சொல்லுகிறீர்களே, அதற்கு மேல் என்ன விவாதம் வேண்டியிருக்கு? படிப்பவர் புரிந்து கொள்வதுதான் கடைசி அளவுகோல், ultimate arbiter.
 
நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளைப் போட்டு மனதை குடைகின்றீர்.
 
நீங்கள் பலரின் தமிழ் உரைநடைகளை இயற்கையாக எடுத்துக் கொண்டு, பழக்கப் பட வேண்டும்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 10:03, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெ. ஜெயலலிதா" page.