மரவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை முன்னேற்றம்
→‎வரலாறு: எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 19:
 
== வரலாறு ==
தற்காலத்தில் உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, ''ம. எசுக்கியூலெண்டா'' தாவர இனத்தின் துணை இனமான ''பிளபெலிபோலியா'' என்னும் காட்டு மரவள்ளி இனத்திலிருந்தே உருவானதாகக் கருதப்படுகின்றது. இக் காட்டுவகையின் வீட்டுப் பயிராக்கம் ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தொடங்கியது. கிமு 6,600 காலப் பகுதியைச் சேர்ந்த, [[மெக்சிக்கோ குடா]]வின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள [[சான் ஆண்ட்ரெசு]] தொல்லியல் களத்தில் மரவள்ளி மகரந்தப்பொடி காணப்பட்டது. எல் சல்வடோர் நாட்டில் உள்ள 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட [[மாயன் நாகரிகம்|மாயன்]] காலத்துத் தொல்லியல் களமான [[ஜோயா டி செரன்|ஜோயா டி செரனில்]] மரவள்ளிப் பயிர்செய்கை குறித்த நேரடியான சான்றுகள் கிடைத்துள்ளன. தென்னமெரிக்காவின் வடக்குப் பகுதி, நடு அமெரிக்காவின் தெற்குப் பகுதி, கரிபியப் பகுதி ஆகியவற்றை எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த காலத்துக்கு முன்பே, மரவள்ளி, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக ஆகிவிட்டது. போத்துக்கேய, எசுப்பானியக் குடியேற்ரவாதக்குடியேற்றவாதக் காலங்களிலும், இப் பகுதியில் மரவள்ளிச் செய்கை தொடர்ந்து நடைபெற்றது. கொலம்பசின் காலத்துக்கு முற்பட்ட அமெரிக்காக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் முக்கிய உணவாக விளங்கிய மரவள்ளி அவர்களின் தாயக ஓவியங்களிலும் இடம்பெற்றது. மோச்சே மக்கள் தமது மட்பாண்டங்களில் மரவள்ளியை வரைந்தனர்.
அமேசானை பிறப்பிடமாகக் கொண்ட மரவள்ளிக் கிழங்கு இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் கேரளாவில் போர்துகீசியர்களால் அறிமுகப்படுத்தப் பட்டதுஅறிமுகப்படுத்தப்பட்டது.
<br />
 
==பொருளாதார முக்கியத்துவம்==
மரவள்ளிக்கிழங்கு ஒரு பெரிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பயிராகும். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன் படுத்துகின்றனர். இக்கிழங்கிலிருந்து சுமார் 300 கிலோ கலோரி ஆற்றல் பெறலாம். வளரும் நாடுகளில் மரவள்ளிக்கிழங்கு மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வாணிகப் பயிராகவும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மரவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது