பேச்சு:ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விஜயராகவன், மன்னிக்கவும்
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 56:
 
ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்? ஏன், அகராதிகளில் உள்ள பிறமொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள்? J என்பது எளிதாக அறியக் கூடிய ஆங்கில எழுத்து; அதனால் அதை தவிர்க்கலாம் என்கிறீர்களா? அப்ப, அறிய கடினமாக இருக்கும் சொற்களை ஆராயாமல் ஏற்றுக் கொள்வது நம் சோம்பல் தானே? கடந்த இரண்டு ஆண்டு அனுபவத்தில், தமிழ் விக்கிபீடியாவின் மொழிக் கொள்கை என்றுமே கட்டுரை ஆசிரியருக்கு ஊக்கத்துக்கு தடை போட்டதாக இல்லை. நற்றமிழில் எழுது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எவ்வளவு இயலுமோ அவ்வளவே எழுதச் சொல்கிறோம். அதே வேளை உங்கள் கட்டுரைகளில் பிறர் நற்றமிழ் மாற்றங்களை புகுத்துவார்கள் எனில் அதில் அவர்கள் ஆர்வம், முனைப்பு. அதை கொள்கை ரீதியாக தடை செய்வதற்கு ஒன்றுமில்லை. இருக்கிற தமிழ்ச் சொல்லை எல்லாம் நீக்கி விட்டு பிற மொழிச்சொல்லை புகுத்துவது தான் மறுப்புக்குரியது. சொற்களை குறித்து அறிவது என்றுமே எனக்கு மனதை குடையவில்லை. எழுத்துப் பிழைகளுடன் உள்ள உங்கள் தமிழை புரிந்து கொள்வதும் அதற்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டி இருக்கிற விக்கி நடைமுறையும் தான் மண்டையை குடைகிறது. தமிழை பிழையின்றி எழுதத் தெரியாத உங்களின் மொழியியல் கருத்துக்களுக்கு எந்த வித மதிப்பும் என்னால் தர இயலவில்லை. மன்னிக்கவும்.--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 10:43, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
"ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்?"
ரவி, இந்த இரண்டு பிரச்சினைகளும் தனி. ஜெ.ஜயலலிதா, எம்.ஜி.ஆர், சி.வி.ராமன், சி.என். அண்ணாதுரை இவற்றில் நாம் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழில் எழுதுகிறோம். மக்கள் அப்ப்படி சொல்லிவந்தாலும், அது அவர்கள் பெயர் அல்ல. சி.என். அண்ணாதுரையின் அதிகாரபூர்வமான பெயர் காஞ்சி நடராஜன் அண்ணாதுரை. அதனால் தலைப்பில் அவர் பெயர் க.ந.அண்ணாதுரை என்றிருக்க வேண்டும். தமிழில் சி.என். என படிப்பது பொருளற்றது. எம்.ஜி.ஆர்.உம், தமிழ் கட்டுரை தலைப்பில் ம.கோ.இராமச்சந்திரன். 'ஜெ.ஜயலலிதா' ஆங்கில Jவை குறிக்கிரது. சி.வி.ராமன் ச.வெ.இராமன் என்றிருக்கவேண்டும் எனெனில் அவர் பெயரை தமிழில் எழுதினால் சந்திரசேகர வெங்கட ராமன் ஆகும். ஆங்கில பதங்களை, பெயரில் முன்னால் போடுவது ஆங்கில மோகமே.
 
 
ஜெ.ஜயலலிதாவைப் பற்றி சிந்திக்கும் போது, என் எண்ணம் மாறுகிரது. ஏனெனில் ஜெ.ஜெயலலிதாவை ஜெயராமன் ஜயலலிதா என்று எடுத்துக் கொள்ளலாம். அதனால் ஜயலலிதா பற்றி எழுதியதை வாபஸ் வாங்குகிரேன். நீங்கள் இப்படிப்பட்ட படிப்பை சொல்லியிருந்தால், நான் எப்போதோ திருப்தி அடைந்திருப்பேன்.
 
 
ஜாதி என்பது தமிழ்சொல். தமிழ் அகராதிகளில் போட்டு பாருங்கள்.[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&display=utf8&table=tamil-lex] . தற்கால தமிழிலக்கியமும் 'ஜாதி'யை பயன்படுத்துகிரது. [http://www.infitt.org/pmadurai/mp204.html]--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 11:26, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெ. ஜெயலலிதா" page.