பேச்சு:ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 33:
 
:(1) கூகிள் தேடலின் விடைகள் விக்கிக்கு முக்கியமில்லை. இதுபற்றி பயனர் சுந்தர் ஓரிடத்தில், ஆங்கில விக்கியின் கொள்கை உரையாடலில் இருந்து எடுத்தெழுதினார். எனவே கூகிள் தேடல் விடைகளை ஒரு வலுசேர்க்கும் கருத்தாக வைக்காதீர்கள் (2) தமிழ்மொழி '''வாழும்''' மொழி. ''செத்த'' மொழி இல்லை. புதுச் சொற்கள் வந்து கொண்டே இருக்கும். பழைய சொற்கள் சில வழக்கற்றுக்கொண்டே இருக்கும். இன்று வழங்கும் பல்லாயிரக்கணக்கான சொற்களானவை நீங்கள் காட்டும் பழம் அகராதியில் காணவியலாது. அண்மைக் காலத்தில் க்ரியா என்னும் ஒரு புது அகராதி வெளி வந்தது, அதில் வழக்கில் உள்ள ஏராளமான சொற்கள் விடுபட்டு இருந்தன. Tamil Lexicon ஓர் அரிய படைப்பு என்பதை யாரும் மறுக்க இயலாது, ஆனால் அதில் ஏராளமான குறைகள் இருப்பது பற்றி [[தேவநேயப் பாவாணர்]] போன்ற பேரறிஞர்கள் எழுதியுள்ளனர். மேலும் அது பழைய அகராதி, வழக்கில் உள்ள பல சொற்கள் அதில் இல்லாதது வியப்பில்லை. அதில் தேடுவது மிகவும் நல்லது, ஆனால் அதில் உள்ளதால் பயன்படுத்த வேண்டும் என்பதில் வலு இல்லை. அகரமுதலிக் கலையில் பல '''செல்லா'''ச் சொற்களும், வரலாற்று நோக்கில் சேர்ப்பது உண்டு. --[[பயனர்:செல்வா|செல்வா]] 16:59, 15 பெப்ரவரி 2007 (UTC) ஒரு சோதனைக்காக "கடவுள் மறுப்பு" என கூகிளில் இட்டுத் தேடினால் ''இன்று'' 1320 பக்கங்கள் சுட்டுகின்றது. கூகிள் தேடலின் விடைகள் ஒரு சொல்லின் தேர்வுக்கு வலு சேர்பதல்ல.--[[பயனர்:செல்வா|செல்வா]] 17:05, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
கடவுள் மறுப்பும் விளக்கச் சொல்தான். எவ்வளவோ விளக்கச் சொற்களை சாதுர்யமாக அமைக்கலாம். ஆனால் மாணிக்கவாசகர் காலத்திலிருந்து (அதற்கு முன்னாடியும் இருக்கலாம்) பயனாகும் சொல் நாத்திகம். ஆங்கிலத்தில் atheism என்றழைக்கிறோம். அது கிரேக்க வேர், ஆனாலும் ஆங்லேய வேரில்லை என யாரும் சொல்லி மற்ற கலைச் சொற்க்களை கண்டுபிடிப்பதில்லை.
 
செ.ப.அ. . ஒவ்வொரு தெரிந்த தமிழ் சொல்லுக்கும், தமிழர்களால் ஆளப்பட்ட சொல்லும் தற்காலத்திலேயும், எல்லா தமிழ் இலக்கியத்திலும் எப்படி பொருளாகிறது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்தை உள்ளது. அந்த வேலையை அது பிராமாதமாக செய்கிரது. அதற்கு நிகர் இதுவரை வேறொரு அகராதியும் தமிழில் இல்லை. இதுவரை அதன் கோட்பாடுகளை கொடுத்ததை மறுக்கமுடியாது. உதாரணமாக 'நாத்திகம்' திருவாசகத்தில் பயனாகிரது என சொல்கிறது; அதை மறுக்கப் போகிறீர்களா? பொதுவாக அறியும் அர்த்ததை (கடவுள் இல்லை என) கொடுக்கிரது, அதை மறுக்கிறீர்களா? தேவநேய பாவாணரை சுட்டிக் காட்டி அதையெல்லம் மறுக்கப் போகிறீர்களா? உங்கள் நோக்கம் புரியவில்லை.
 
நாம் பொதுவான அகராதியை நம்பாவிட்டால் - அதுவும் தக்க காரணமின்றி - , பொதுவாக தெரியும் சொற்களுக்கு அது தரும் பொருள்களை புறக்கணித்தால், பொது சம்மதம் இல்லாமல் சுய வெறுப்பு/விறுப்பு படி தன்னிச்சையாக எழுதுவோம்..--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 17:34, 15 பெப்ரவரி 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ம. கோ. இராமச்சந்திரன்" page.