எல்லிஸ் ஆர். டங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
==தமிழ்த் திரைப்பட இயக்குனராக==
[[Image:Ellis Dungan SD Santhanalakshmi MK Thyagaraja Bhagavathar Ambikavathy 1937.jpg‎‎|thumb|left|300px|அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்]]
கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கன் மற்றும் மைக்கேல் ஓர்மலேவ் ஆகியோரை தன்னுடன் [[இந்தியா]] வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். டாண்டன் [[கல்கத்தா|கல்கத்தாவில்]] [[பக்த நந்தனார் (திரைப்படம், 1935)|நந்தனார்]] என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.
 
இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த [[சதிலீலாவதி|சதி லீலாவதி]] (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய [[சீமந்தினி]] (1936), [[இரு சகோதரர்கள்]] (1936) , [[அம்பிகாபதி (திரைப்படம், 1937)|அம்பிகாபதி]] (1937), [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] (1940) ஆகியவை வெற்றிபெற்றன. [[தியாகராஜ பாகவதர்]] நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது [[ஆங்கிலம்]] அறிந்த உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]] அரசாங்க கொள்கைகளை பரப்பும் சில படங்களையும் இயக்கினார்<ref>[http://www.hindu.com/thehindu/fr/2002/02/01/stories/2002020100850300.htm He transcended barriers with aplomb on The Hindu website]</ref><ref>[http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2004121700410500.htm&date=2004/12/17/&prd=fr& Full of technical innovations- Article on the movie Meera]</ref>.
 
[[எம். எஸ். சுப்புலட்சுமி|எம். எஸ் சுப்புலட்சுமியின்]] நடிப்பில் டங்கன் இயக்கிய [[மீரா (திரைப்படம்)|மீரா]] (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் [[இந்தி|இந்தியிலும்]] இயக்கினார். புதிய ஓளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியஅறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில், இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்க கலாச்சாரத்தை தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்<ref>[http://www.hindu.com/mp/2008/10/04/stories/2008100452520700.htm Blast From the Past - Ponmudi 1950], த இந்து, 4 அக்டோபர் 2008].</ref>
 
==பிற்கால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/எல்லிஸ்_ஆர்._டங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது