மாரடைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
MeshID = D009203 |
}}
[[File:AMI_bloodtests_engl.png|கடுமையான இதயத்தசை இறப்பின் போதுள்ள [[இரத்தம்|இரத்த]] சோதனை அளவுகள்|right|thumb|190px]]
 
[[இதயம்|இதயத்தின்]] பகுதிகளுக்குக் [[குருதி]]யோட்டம் தடைப்படும்போது '''இதயத்திசு இறப்பு''' அல்லது '''இதயத்தசை இறப்பு''' (''Myocardial infarction'') ஏற்படுகிறது. இது பெரும்பாலும் [[முடியுருக் குருதிச்சுற்றோட்டம்|முடியுருத் தமனி]]யில் தடையோ குறுக்கமோ ஏற்படுவதால் உண்டாகிறது. இத் தமனிகளின் சுவர்களில் [[கொலஸ்டிரால்]] போன்ற [[கொழுப்பு]]ப் பொருட்களும் [[வெள்ளை அணுக்கள்|வெள்ளைக் குருதி அணுக்களும்]] சேர்ந்து உட்புறத்தில் [[வீக்கத்தழும்பு]] உருவாகுவதால் தமனி குறுகிவிடுகின்றது. தமனியில் உள்ள இத்தகைய நிலை [[தமனிக்கூழ்மைத் தடிப்பு]] என அழைக்கப்படுகின்றது. இதனால் இதயத் தசைகளுக்குக் குறைந்த அளவு [[குருதி|குருதியே]] செல்வதால் [[உயிர்வளி]]ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்நிலை கொண்டுள்ளவர் கடினமாய் உழைக்கும் வேளையில் அவர்களுக்கு [[நெஞ்சுவலி]] ஏற்படும். ஓய்வு எடுக்கும் போதும் நைட்ரேட்டு மாத்திரைகள் சாப்பிடும் போதும் [[இதயம்|இதய]] குருதியோட்டம் சீரடைந்து இந்த வலி குறையும். இதை [[மார்பு நெறிப்பு]] என்கிறோம். இந்த நிலைக்கான மருத்துவ உதவியை உரிய காலத்தில் தராவிட்டால் வீக்கத்தழும்பு வெடித்து குருதிக்குழாய்களுள் [[குருதி உறைதல்|குருதி உறைந்து]] [[குழலியக்குருதியுறைமை]] ஏற்பட்டு நிரந்தரமான அடைப்பு உருவாகும். இந்நிலையில் குறிப்பிட்ட இதயத்தசைப் பகுதி குருதி பெறுவதை முற்றிலும் இழக்கின்றது. இதனால் இதயத் தசைகள் இறந்து விடுகின்றன. இந்த நேரத்தில் ஓய்வு எடுத்தாலும் வலி குறையாது. இத்தகைய சூழலே இதயத்தசை இறப்பு ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது