தூலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: ga:Túiliam
சி clean up
வரிசை 1:
{{தகவற்சட்டம் தூலியம்}}
'''தூலியம்''' அல்லது '''தியூலியம்''' (Thulium, ஆங்கில ஒலிப்பு θjuːliəm) என்பது ஒரு [[வேதியியல்]] [[தனிமம்]]. இதன் தனிம அட்டவணைக் குறியீடு Tm என்பதாகும். தூலியத் தனிமத்தின் [[அணுவெண்]] '''69''', இதன் [[அணுக்கரு]]வில் '''100''' [[நொதுமி]]கள் (நியூட்ரான்கள்) உள்ளன. தூலியம் [[லாந்த்தனைடு]]களின் வரிசையைச் சேர்ந்த, அரிய கனிமங்கள் வரிசையில் உள்ள, மிகக் குறைவாகக் கிடைக்கும் தனிமங்களில் ஒன்று. இம் [[மாழை]] (உலோகம்), பார்ப்பதற்கு வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். எளிதாக கத்தியை வைத்து நறுக்ககூடிய அளவுக்கும் மென்மையானது. தட்டி கொட்டி நீட்டி கம்பியாக்ககூடிய வளையக்கூடிய பண்புடைய பொருள். தூலியம் உலர்ந்த காற்றில் அரிப்புறாமல் ஓரளவிற்குத் தாங்கும் ஒரு தனிமம். பெரும்பாலும், இயற்கையில் கிடைக்கும் தூலியம் Tm-169 எனப்படும் நிலையான [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகத்தான்]] உள்ளது.
 
==பயன்பாடுகள்==
வரிசை 9:
==வரலாறு==
தூலிலத்தை பெர் தியொடோர் கிளீவ் என்னும் சுவீடிசிய வேதியொயலாளர் 1879 ல் கண்டுபிடித்தார். இவர் பிற அரிய கனிம ஆக்சைடுகளில் உள்ள மாசுப்பொருள்களைக் கண்டறிய முயன்ற பொழுது இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. எர்பியா (Er2O3) எனப்படும் எர்பியம் ஆக்சைடில் உள்ள மாசுப்பொருள்களை நீக்க முயன்று கொண்டிருந்தார். அப்பொழுது இவர் இரு புதிய பொருள்களைக் கண்டார். அவற்றுள் ஒன்று பழுப்பு நிறமாகவும், மற்றது பச்சை நிறமாகவும் இருந்து. பழுப்பு நிறமாக இருந்த பொருள் பின்னர் ஹோல்மியம் ஆக்சைடு என்று அறியப்பட்டது. இதனை ஹோல்மியா என்று கிளீவ் அழைத்தார். ஆனால் பச்சையாக இருந்த பொருள் முன்னர் அறியாத ஒரு பொருளின் ஆக்சைடு என்று நினைத்தார்கள். இதனை தூலியா என்று அழைத்தார். தூலியா என்னும் இப்பெயர் சுகாந்தினேவியாவைச் (ஸ்காண்டினேவியாவைச்) சேர்ந்த, பழங்காலத்தில் இருந்தே அறியப்பெற்ற, [[தூலி]]என்னும் தீவின் பெயரடிப்படையில் சூட்டப்பட்டது.
தூலியம் என்னும் இத்தனிமம் மிகவும் அரிதாகக் கிடப்பதால், பிரித்தெடுத்து தூய்மைப் படுத்தும் அளவுக்கு அதிகமாக முன்னிருந்த ஆய்வாளர்களுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ஷயர் கல்லூரியில் பணி புரிந்த சார்லஸ் ஜேம்ஸ் (Charles James) பிரித்தானியர்தான் முதன்முதலாக தூலியத்தைத் தூய்மைப்படுத்தி பிரித்தெடுத்தார். இவர் முன்பு தான் கண்டுபிடித்த புரோமேட்டு வடித்தூமைப்படுத்தி படிகமாக்கும் முறையைப் பின்பற்றி தூலியத்தை பிரித்தெடுத்ததை கண்டுபிடிப்பை 1911இல் வெளியிட்டார். இவருக்கு சீரான தன்மையுடைய தூலியத்தைப் பெற 15,000 தனித்தனி படிமுறைகள் தேவைப்பட்டதாம் <ref>{{cite journal|last=James|first=Charles|year=1911|title=Thulium I|journal=J. Am. Chem. Soc.|volume=33|issue=8|pages=1332–1344|doi=10.1021/ja02221a007}}</ref>
மிகு தூய்மையான தூலியம் 1950களில்தான் விற்பனைக்கு வந்தது. மின்மவணு-பரிமாற்றம் வழி பிரிப்புமுறையில் (ion-exchange separation) இன்று மிகுதூய்மையான தூலியம் பிரித்தெடுக்கிறார்கள். அமெரிக்க பொட்டாஷ் அண்டு கெமிக்கல் நிறுவனத்தை சேர்ந்த லிண்டுசே கெமிக்கல் பிரிவு 99% அல்லது 99.9% தூய்மையான தூலியத்தை 1959 இல் ஒரு பவுண்டுக்கு $850 முதல் $900 என்னும் கணக்கில் விற்பனை செய்தார்கள். இன்றும் ஏறத்ததழ அதே பண மதிப்பு கொண்டுள்ளது. ஒரு கிராம் எடை தூலியம் பெற ஏறத்தாழ அமெரிக்க $4.50 அல்லது $5.00 பணம் தேவைப்படும்.
 
==கிடைப்பு==
இத்தனிமம் தூயமையாக இயற்கையில் கிடப்பது மிக அரிது, ஆனால் மிகச்சிறிதளவு சில அரிதாக கிடைக்கும் கனிமங்களில் கிடக்கின்றது. மோனாசைட்டு என்னும் கனிமத்தில் சற்றேறக்குறைய ~0.007% அளவு தூலியம் உள்ளது. ஆற்றுமனலில் கிடைக்கும் இந்த மோனாசைட்டை மின்மவணு-பரிமாற்றம் முறையைப் பின்பற்றி பிரித்தெடுக்கிறார்கள் (ion-exchange separation). தற்காலத்தில் தூலியம் பெரும்பாலும் [[சீனா]]வில் உள்ள சில களிமண்ணில் இருந்து ப்ரித்தெடுக்கிறார்கள்.
==ஓரிடத்தான்கள்==
இயற்கையில் கிடைக்கும் தூலியம் பெரும்பாலும் Tm-169 என்னும் நிலையான ஓரிடத்தானாக உள்ளது. இயற்கையில் கிடைக்கும் தூலிய ஓரிடத்தான் 100% Tm-169 ஆகும். இது தவிர 31 வகையான கதிரியக்க ஓரிடத்தான்களை வரையறை செய்துள்ளார்கள். Tm-171 என்னும் ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 1.92 ஆண்டு, Tm-170 என்னும் ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 128.6 நாட்கள். Tm-168 என்னும் ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் 93.1 நாட்கள்; அதேபோல Tm-167 என்னும் ஓரிடத்தானின் அரை-வாழ்வுக் காலம் வெறும் 9.25 நாட்கள்தாம்.
பிற கதிரியக்க ஓரிடத்தான்கள் யாவற்றின் அரை-வாழ்வுக் காலங்கள் 64 மணிநேரத்திற்கும் குறைவானது. இவற்றில் பெரும்பான்மையானவற்றின் அரை-வாழ்வுக் காலம் 2 மணித்துளிகளுக்கும் குறைவானது.
தூலிய ஓரிடத்தான்களின் [[அணுநிறை]] (அணுத்திணிவு) 145.966 u (Tm-146) முதல் 176.949 u (Tm-177) வரையானதாக உள்ளது. Tm-169 வகையான நிலையான ஓரிடத்தானகாக மாறுமுன், முக்கியமான சிதைவு முறை எதிர்மின்னையைப் பற்றி நிகழ்வது. ஆனால் அதன் பின் முக்கியமான சிதைவு முறை பீட்டாப் பொருள் உமிழ்ந்து சிதவது. சிதைவில் முதன்மையானவை . Tm-169 வகையான நிலையான ஓரிடத்தானகாக மாறுமுன் முக்கியமான சிதைவு விளவுப் பொருள் அணுவெண் 68
"https://ta.wikipedia.org/wiki/தூலியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது