"அந்தியோக்கியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:clean up
சி (தானியங்கி:clean up)
கான்ஸ்டாண்டிநோப்புள் நகரம் வளர்ந்து, [[எருசலேம்]] முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.
 
உரோமைப் பேரரசன் ஜூலியன் கி.பி. 362இல் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஒரு புலம்பல் விழா நடந்துகொண்டிருந்தது. அதை ஜூலியன் விரும்பவில்லை. அதுபோலவே கிறித்தவர்களும் ஜுலியன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக உணர்ந்தார்கள். யூதர்களின் சமயச் சடங்குகள் மற்றும் புராதன சமயத்தின் சடங்குகள் ஆகியவற்றை ஆதரித்த ஜூலியன் அந்தியோக்கியாவில் இருந்த கிறித்தவப் பெருங்கோவிலை மூடியது கிறித்தவர் நடுவே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது தவிர, ஜூலியனின் இராணுவத்தினர் புராதன சமயத்தைச் சார்ந்த கோவிலில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு, மதுவருந்தி நகரத் தெருக்களில் தொந்தரவு கொடுத்தனர்; அதே நேரத்தில் நகர மக்கள் பசியால் வாடினர். எனவே மக்கள் ஜூலியனை வெறுத்தனர். அவரது தாடி பற்றிக் கேலிச் சித்திரங்களும் வெளியாயின.
 
526இல் நிகழ்ந்த பயங்கர [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தின்போது]] அந்தியோக்கியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோக்கியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோக்கியாவைத் தாக்கியதோடு அங்கு வாழ்ந்த சுமார் 3 இலட்சம் மக்களைக் கொன்றார். அந்தியோக்கியாவின் புகழும் மங்கத் தொடங்கியது.
{{விவிலிய இடங்கள்}}
 
 
கி.பி. 637இல் அந்தியோக்கியாவின் அருகே நிகழ்ந்த இருப்புப் பாலச் சண்டையில் (Battle of Iron Bridge)
[[ராசிதீன் கலீபாக்கள்]] அந்தியோக்கியாவைக் கைப்பற்றினார்கள். அப்போது பிசான்சியப் பேரரசை ஹெராக்லியஸ் என்பவர் ஆண்டுவந்தார். அந்தியோக்கியா அரபியில் "அந்தாக்கிய்யா" (أنطاكيّة (Antākiyyah) என்று பெயர்மாற்றம் பெற்றது. அந்நகரம் சுமார் 350 ஆண்டுகளாக ஓயாது போர்நிகழும் தளமாக மாறியதால் சீரழியத் தொடங்கியது. துருக்கியர் அந்தியோக்கியாவை 1084இல் கைப்பற்றினார்கள்.
 
==சிலுவைப் போர்க் காலத்தில் அந்தியோக்கியா==
1,15,632

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1043195" இருந்து மீள்விக்கப்பட்டது