எஸ். என். லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 20:
}}
 
'''எஸ். என். லட்சுமி''' ([[1934]] - [[பெப்ரவரி 20]], [[2012]], அகவை 85) முதுபெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகை. [[1948]] ஆம் ஆண்டில் [[சந்திரலேகா]] திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய லட்சுமி இருநூறுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும், ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தவர். இறுதிக் காலங்களில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். தமிழக அரசின் [[கலைமாமணி]] பட்டம் பெற்றவர்.
 
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். என். லட்சுமி ஆறு வயது முதல் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து திரைப்படத்துறைக்கு வந்தவர். [[சர்வர் சுந்தரம்]], [[துலாபாரம்]], [[மைக்கேல் மதன காமராஜன்]], [[மகாநதி (திரைப்படம்)|மகாநதி]], [[விருமாண்டி]] எனப் பல படங்களில் குணசித்திர நடிகையாக நடித்துப் புகழ் பெற்றவர். இறக்கும் போது "தென்றல்" , ''சரவணன் மீனாட்சி'' ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._என்._லட்சுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது