வலைவடிவ நகர அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Windermere.jpg|right|thumb|200px|புளோரிடாவில், வின்டெர்மியர் என்னும் நகரின் எளிமையான வலையமைப்பைக் காட்டும் நிலப்படம்.]]
'''வலைவடிவ நகர அமைப்பு''' (grid plan) அல்லது '''வலைவடிவச் சாலை அமைப்பு''' என்பது ஒரு வகையான நகரத் தளவமைப்பைக் குறிக்கும். இதில் ஒன்றுக்கொன்று இணையான ஒரு தொகுதி [[சாலை]]களும், அவற்றுக்குச் [[செங்குத்து|செங்குத்தான]] இன்னொரு தொகுதிச் சாலைகளும் ஒன்றையொன்று வெட்டுவதனால் வலை போன்ற தளவமைப்பு உருவாகிறது. பண்டைக் கிரேக்கத்தில் இவ்வாறான நகர அமைப்பு [[இப்போடேமிய நகர அமைப்பு|இப்போடேமிய]] அமைப்பு எனப்பட்டது.
 
==பண்டைக்கால வலைவடிவ நகர அமைப்பு==
வலைவடிவ நகர அமைப்பு, மிகவும் பழைய காலத்திலேயே பல்வேறு பண்பாடுகளில் தோற்றம் பெற்றது. சில மிகப் பழமையான நகரங்கள் இவ்வகையான அமைப்புக் கொண்டவை. கிமு 2600 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் செழித்திருந்த [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தைச்]] சேர்ந்த நகரங்களான [[அரப்பா]], [[மொகெஞ்சதாரோ]] போன்ற நகரங்கள், வடக்குத் தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைந்து ஒன்றையொன்று வெட்டிச் செல்லும் வலைவடிவச் சாலையமைப்பைக் கொண்டிருந்தன. கிமு முதலாவது ஆயிரவாண்டில் இருந்து கிபி 11 ஆம் நூற்றாண்டுவரை [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டப்]] பகுதிகளில் நிலைத்திருந்த தக்சிலா அல்லது [[காந்தார நாகரிகம்|காந்தார நாகரிகத்தைச்]] சேர்ந்த நகரங்களும் வலைவடிவ அமைப்பைக் கொண்டிருந்தன.
 
கிமு 2570 - 2500 காலப் பகுதியைச் சேர்ந்த எகிப்தின் கிசா என்னும் ஊரிலும், சுற்றுமுறையில் வரும் தொழிலாளர்கள் தங்குவதற்கான குடியிருப்புப் பகுதிகளும் இவ்வாறான அமைப்பைக் கொண்டிருந்தன.
 
[[பகுப்பு:நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவடிவ_நகர_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது