செம்பியன் செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்''' ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழக]] சிறப்புப்பட்டதாரியான இவர் [[விவேகி (சஞ்சிகை)| விவேகி]] சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
 
== வரலாறு ==
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனது ஆழமான பங்களிப்பினை ஆற்றிய முக்கிய படைப்பாளிகளிலொருவரான செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபாலன்) தனது அறுபத்திரண்டாவது வயதில் கொழும்பில் காலமானார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
 
== எழுத்துப்பணி ==
 
விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தநங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
== திரைக்கதை ==
[[செங்கை ஆழியான்]] எழுதிய ''வாடைக் காற்று'' திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதையைதிரைக்கதை, வசனங்களை எழுதியவர் செம்பியன் செல்வன்.
 
== இவரது நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது