ஏ. சி. தாசீசியஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: ஏ.சி.தாசீசியஸ் (இலங்கை) ஈழத்து நவீன நாடக முன்னோடி. ஆரம்பத்தில் ஆங்கில ...
(வேறுபாடு ஏதுமில்லை)

03:41, 17 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

ஏ.சி.தாசீசியஸ் (இலங்கை) ஈழத்து நவீன நாடக முன்னோடி. ஆரம்பத்தில் ஆங்கில நாடகத்தின் மேற்கத்தைய நுட்பங்களைப் பயின்ற அவர், தமிழ் நாடகங்களுக்குத் திரும்பி, ஈழத்தில் கிராமம் கிராமமாக அலைந்து அங்கு உள்ளோடி இருந்த மரபுகளையும் உள்வாங்கி புதிய நாடக மரபை உருவாக்கினார்.

அவருடைய பிச்சை வேண்டாம், பொறுத்தது போதும், கோடை, புதியதொரு வீடு, எந்தையும் தாயும், ஸ்ரீசலாமி போன்ற நாடகங்கள் வெகுவாகப் பாராட்டப் பெற்றவை.

லண்டனில் பத்தாண்டுகளுக்கு மேலாக பிபிசி நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அப்போதும் தொடர்ந்து நாடகத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய ஸ்ரீசலாமி நாடகம் ஆங்கில, ஜேர்மன், தமிழ் ஆகிய மூன்று மொழிக் கருத்தும் ஒரு சேர அமைந்;த ஒன்று. அது சுவிஸ் நாட்டில் 36 தடவை அரங்கேறி உள்ளது. ஐரோப்பா, கனடா, தமிழ் நாடு ஆகிய நாடுகளில் நாடகப் பயிற்சி அளித்துள்ளார். ஸ்விற்சலாந்து அரசு தனது 700 வது ஆண்டு விழாவைக் கொண்டாட நினைத்தபோது அதன் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஆலோசகராகவும்; பயிற்சியாளராகவும் அவரைத் தெரிவு செய்தது.

தற்பொழுது திரு தாசீசியஸ் இங்கிலாந்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._தாசீசியஸ்&oldid=104535" இலிருந்து மீள்விக்கப்பட்டது