வாள்முனை ஆள்கூற்று முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:CircularCoordinates.svg|thumb|250px|ஒரு சமதளத்தில் அமைந்திருக்கும் புள்ளிகளைக் குறிக்கப் பயன்படும் வாள்முனை ஆள்கூற்று முறைமை அல்லது ஒப்புச்சட்டகம். நீளத்தை அளக்கும் நேரான கோல் போன்ற வாளின் அடித்தொடக்கப் புள்ளி ''O'' ஆகவும், அத் தொடக்கப் புள்ளியில் இருந்து நீளத்தை அளக்கும் அச்சு ''L'' ஆகவும் காட்டப் பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள ஒரு புள்ளியைப் பச்சை நிறத்தில் காட்டிய நீள அச்சு அல்லது ஆரக்கோல் தொடக்கப் புள்ளியில் இருந்து 3 அலகு நீளம் உடையதாகவும், இந்த ஆரக்கோல் (வாள்) கிடை மட்டத்தில் இருந்து 60 பாகை மணிகாட்டித் திசைக்கு எதிரான கோணத்தில் சுழன்று நிற்கின்றது என்றும் பொருள். இதனை இம்முறையில்(3,60°)என்று குறிப்பர். இதே போல இன்னொரு சிவப்புப்புள்ளி நீல நிற ஆரக்கோலால் (வாளால்) காட்டியுள்ளது (4,210°)என்பதாகும்.]]
 
[[கணிதம்|கணிதத்தில்]] '''வாள்முனை ஆள்கூற்று முறைமை''' அல்லது '''வாள்முனை ஆயம்''' (''Polar coordinate system'') அல்லது '''ஒப்புச்சட்ட முறைமை''' என்பது ஒரு சமதளத்தில் அமைந்துள்ள எப்புள்ளியையும் முறையாகக் குறிப்பிடும் ஒரு முறைமை ஆகும். இம்முறையில் சமதளத்தில் உள்ள எந்தவொரு புள்ளியையும் ஒரு நீளம், ஒரு கோணம் ஆகிய இரண்டு ஆள்கூறுகளால் குறிக்கப்பெறுகின்றது.
 
இம் முறையில் நிலையான ஒரு தொடக்கப்புள்ளி உண்டு. சமதளத்தில் உள்ள எப்புள்ளியும் இந்தத் தொடக்கப்புள்ளியில் இருந்து எவ்வளவு தொலைவு உள்ளது, என்று கூறும் நீளம் ஓர் ஆள்கூறு. அந்த நீளத்தை உடைய கோலை அல்லது வாளை, கிடை அச்சில் இருந்து [[இடஞ்சுழி]]யாகச் சுழற்றி சமதளத்தில் உள்ள அப்புள்ளியை முனை தொடுமாறு இருந்தால் என்ன கோணம் உள்ளதோ, அது மற்றொரு ஆள்கூறாகவும் கொண்டு குறிக்கப்பெறும் ஒரு முறை ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/வாள்முனை_ஆள்கூற்று_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது