விக்கிப்பீடியா பேச்சு:சொல் தேர்வு/தொகுப்பு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 204:
நட்கீரன், இது எனக்கு தெரியாதது அல்ல. செய்தி சம்பவங்கள் மேல் கவனம் செலுத்துகின்றன. விக்கி கட்டுரைகள் ஒரு தலைப்பின் கீழுள்ள கருத்தின் மேல் கவனம் செலுத்துகிறன. 'நடை' என்பதை நான் 'சொல் தேர்வுகள்' என்ற விதத்தில் உபயோகித்தேன். அதனால் தான் சொற்தேர்வுகளுக்கு செய்தி நிருவனங்களையும், இலக்கியங்களையும் இழுத்தேன். செய்தி தாள்கள் தங்கள் வாழ்விற்கு எல்லோரும் புரியும்படி எழுத வேண்டும் என்பதை மறக்காதீர்கள், செய்திதாளின் உயிரே வாசகர்கள் புரிந்து அதை பணம் கொடுத்து வாங்குவதில் உள்ளது. அதனால் செய்திதாளின் தமிழை ஏளனம் செய்யாதீர்கள் மேலும் விக்கி இணையிலிருப்பதால், செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 13:27, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
:: பதிலுக்கு நன்றி விஜயராகவன். செய்தித் தமிழ் நடையை நான் ஏளனம் செய்யவில்லை. தமிழ் உரை நடையில் செய்தித் தமிழ் நடை ஒரு மைல்கல். பலர் தமிழ் படிக்கவும் அது ஒரு காரணம் ஆயிற்று. பட்டிதர்களிடம் இருந்து பொது மக்களுக்கு செய்தித் தமிழ்நடை தமிழின் எழுத்து புலத்தை எடுத்து சென்றது எனலாம். ஆனாலும் 'சொல் தேர்வுகள்' செய்தி ஊடகங்களிடம் இருந்து பெறப்படவேண்டும் என்பதில் அவ்வளவு ஒப்பில்லை. செய்தி ஊடகங்கள்களின் கவன வீச்சு மட்டுப்படுத்தப்பட்டது. கலைக்களஞ்சியத்தின் கவன வீச்சு அகலமானது, தொலைநோக்கானது. ஆரம்பத்தில் செய்தி தாள்கள் Internet அல்லது இன்ரனற் என்று எழுதுவார்கள். பின்னர் அவர்கள் பின்னியவலை போன்று பயன்படுத்தி, தற்போது இணையம் என்றே பயன்படுத்துகின்றார்கள். அது செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை சரியே. ஆனால், கலைக்களஞ்சியத்தில் தகுந்த, நல்ல தமிழ்ச்சொற்களை கையாள்வது நன்று. செல்வா, இராம.கி, அகராதிகள் பல எமக்கு இந்த விடயத்தில் உதவியாக இருக்கின்றன. இதற்கு நீங்கள் ஆதரவு என்றே மேலே சுட்டியுள்ளீர்கள். சொற்களின் மூலம் பற்றி சிறு கருத்து வேறுபாடு மட்டுமே இங்கு சுட்ட முயல்கிறேன். இந்தக் கருத்தையே நீங்கள் "செய்தித்தாளுக்கு இல்லாத பல வசதிகள் விக்கிக்கு உள்ளன. விக்கியில் நாம் சொல் சிக்கனமாக பல விஷயங்களை துல்லியமாக வைக்க வேண்டும்" என்று கூறுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். பெயர்களை பொறுத்தவரை அது தனிமனிதரின் உரிமை என்பது என் கருத்து. அவர் எப்படி தன் பெயரை எழுதுகின்றாரோ அப்படி எழுதுவதே பொருத்தம். அப்படி தெரியாத சமயத்தில் பொதுவாக அறியப்பட்ட நடைமுறையை பின்பற்றி எழுதி, பின்னர் முழுப்பெயரை கட்டுரையின் ஆரம்பத்தில் தரலாம். அதுவே த.வி. மரபு. இந்த விடயத்தில் த.வி. தெளிவு இருக்கின்றது. அத்தோடு அனேகமான சந்தர்ப்பங்களில் பட்டப்பெயர்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை. சில விதிவிலக்குகள் உண்டு. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:05, 15 பெப்ரவரி 2007
(UTC)
 
== சுந்தருக்கு ==
 
"விஜய், சொல்புழக்கத்தில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நல்ல வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை."-- Sundar \பேச்சு 17:45, 15 பெப்ரவரி 2007
 
சுந்தர், இதில் பல விஷயங்கள் கலந்துள்ளன.
 
 
1. விகி வேர்ச்சொல் ஆராய்வு தளம் இல்லை. எல்லோரும் படிக்கும் வகையில், பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் சொற்களை உபயோகித்து கட்டுரைகள எழுதுவதே குறியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஆங்கில விக்கியில் மில்லியன் மேல் பக்கங்கள் உள்ளன. ஆனால் இதைப்போல் 'ஆங்கில வேர்' சர்ச்சை வருவதே இல்லை. ஆங்கில விகி செயல்முறைகளை முன்னோட்டியாக வைத்தால் தான் வெற்றிகரமாக தமிழ் விக்கி நடத்த முடியும்.
 
2. நாம் சொல்ல வேண்டியதற்க்கு சரியான சொல் அகராதியிலோ, புழக்கத்திலோ இல்லையானல் நிசயமாக புதிய சொற்களை ஆக்கவேண்டும். அப்பொது, தமிழ் 'வேர்' என்பதை நினைவு வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக டிராக்டர் என்பதற்கு , "தமிழ் வேரி"லேயே புது சொல் ஆக்கலாம்
 
3. ஒருவர் மற்றவர் எழுதியதை 'தமிழ் இல்லை' என்று திருத்துவாரானார் அது சரியான போக்கு அல்ல; அது முரட்டடி ஆகும். It is rude and bad manners.
 
4.What you are saying about 'roots', is it mandatory or recommended? I would like to get that point clarified.
 
5.யாராவது எல்லாம் 'தமிழ் வேரில்' தான் சொற்கள் இருக்க வேண்டுமென்றால், தாராளமாக அவர் எழுதும் கட்டுரையில் அவ்வழியை பிடிக்கட்டும். ஆனால் மற்றவர்கள் எழுதும் கட்டுரையில் அந்த "காரணத்தை" கொண்டு திருத்துதல் சரியான போக்காக இல்லை.
 
6. இங்கு யாருக்கும் "தமிழ் வேர்கள்" பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. இது தனி மனிதர்களின் மீது விமரிசனம் அல்ல.யாராவது Ph.D or MA in Tamil Linguistics or Dravidian Linguistics செய்திருந்தால் தான், அந்த துறையில் அதிகாரபூர்வமாக பேச முடியும்.
 
7. விகி எழுதுபவர்களுக்கு உதவியாகவும், சொல்லாட்டம் சீர்திருத்தவும், சில அகராதிகளை அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம். சர்வதேச அளவில் சென்னை பல்கலை தமிழ் அகராதி (Madras University Tamil Lexicon) ஒரு சீர்தரமாக ஒப்புகொள்ளப் பட்டுள்ளது. மேலும் தமிழ் இணைய பல்கலைகழகத்தில் சில அகராதிகள் உள்ளன. அதற்கு மேல் கிரியா தற்கால அகராதி உள்ளது. மேலும் இந்த தளத்தில் http://dsal.uchicago.edu/dictionaries/ நல்ல தமிழகராதிகள் கடைக்கிறன.அகராதிகளை பயன்படுத்துவதால் நாம் சொல்லாட்டங்களில், தனிநபர் அபிப்பிராயங்களிலிருந்து விடுதலையுற்று, புறவய அளவுகோலை பயன்ன்படுத்த முடியும்.
 
8.The present practices and attitudes encourage wrong people to do wrong things in a wrong place.
 
9. நவீன மற்றும் பண்டைய தமிழிலக்கியங்களை 'தமிழ் அல்ல' என ஒதுக்குவது, பொதுஜனங்களுக்கு, தமிழ் விகியின் மேல் வெறுப்பைதான் வளக்கும். அது ஆங்கிலம் படித்து ஆங்கிலத்தில் காலம்கடத்துபவர்களின் வரம்பற்ற செருக்கு போல் தோன்றும்.
 
10. இதற்கு மேல் திருத்தங்களில் rules of engagement ஐ வரையறுப்பது முக்கியம். திருத்தங்கள் வகையாவன
 
 
அ) இலக்கணம்
 
ஆ) எழுத்துப் பிழைகள்
 
இ) சொல்லாடல்
 
ஈ) எழுதிய தகவல் பற்றி
 
 
இதில் அ,ஆ நிச்சயமாக யாராலும் செய்யலாம். மற்ற்வற்றைப் பற்றி கட்டுரையாசிரியற்கு 'உரையாடல்' பக்கத்தில்,பல கோணங்களில் விமரிசனம் செய்யலாம். கட்டுரையாசிரியரே கட்டுரையை மாற்றட்டும்.
 
 
மேற்ச்சொன்ன கருத்துகளின் மேல், உங்கள் அபிப்பிராயம் என்ன?--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 20:06, 18 பெப்ரவரி 2007 (UTC)
Return to the project page "சொல் தேர்வு/தொகுப்பு 2".