உயிரணுக்கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:نظریه سلولی
சி தானியங்கி:clean up
வரிசை 7:
[[1665]] இல் [[ரொபர்ட் ஊக்]] (Robert Hooke) இனால் உயிரணு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. அவர் தக்கையின் மிக மெல்லிய துண்டுகளை ஆராய்கையில் தேன்கூட்டின் அறைகளைப் போன்ற பெருந்திரளான நுண்ணிய துளைகளை அவதானித்தார். இதனால் ஹுக் அவற்றை உயிரணுக்கள் '''(செல்கள்)''' எனப் பெயரிட்டார். எனினும் அவருக்கு அதன் உண்மையான அமைப்பும், தொழிற்பாடும் தெரியவில்லை. <ref>{{cite book |author=Inwood, Stephen |title=The man who knew too much: the strange and inventive life of Robert Hooke, 1635-1703 |publisher=Pan |location=London |year=2003 |pages=72 |isbn=0-330-48829-5}}</ref>. இந்த உயிரணுக்கள் (உண்மையிலேயே அவை உயிரற்ற கலச்சுவர்) பற்றி ஹுக் தனது '"(Micrographia)'" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். <ref>{{cite journal | author=Karling JS | title=Schleiden's Contribution to the Cell Theory| journal=The American Naturalist | year=1939 |volume=73 | pages=517–37| doi=10.1086/280862}}</ref>. அவரின் குறிப்பில் அனேகமாக எல்லா [[உயிரணு|உயிரணுக்களிலும்]] காணப்படும் [[கரு]] (nucleus) பற்றியோ, அல்லது மற்றைய [[புன்னங்கங்கள்]] (organelles) பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
 
முதன் முதலாக நுணுக்குக்காட்டியினூடாக உயிருள்ள உயிரணுவை அவதானித்தவர் [[அன்டன் வான் லீவன்ஹுக்]] (Antonie van Leeuwenhoek) ஆவார். <ref>{{cite web |url=http://www.euronet.nl/users/warnar/leeuwenhoek.html#references |author=Moll WAW | title= Antonie van Leeuwenhoek |year=2006 |accessdate=2008-11-25}}</ref> அவர் 1674 இல் [[ஸ்பைரோகைரா]], ஒரு [[பாசிகள்|பாசியினை]] அவதானித்து அவற்றை ''அனிமல்குலேஸ்'' (animalcules) எனப் பெயரிட்டார். அவர் பெரும்பாலும் [[பாக்டீரியா]]வையும் கண்டிருக்கலாம்.<ref>{{cite journal |author=Porter JR |title=Antony van Leeuwenhoek: tercentenary of his discovery of bacteria |journal=Bacteriol Rev |volume=40 |issue=2 |pages=260–9 |year=1976 |month=June |pmid=786250 |pmc=413956 |doi= |url=http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=786250}}</ref> உயிரணுக்களை கண்டுபிடிக்க முன்னர் இருந்த உயிர்ச்சக்தி (vitalism) கொள்கைகளை எதிர்ப்பது போன்றே உயிரணுக்கொள்கை இருந்தது.
 
உயிரணுக்களை தனிப்பட்ட அலகுகளுக்கு பிரிக்கலாம் என்ற கருத்தை ''லுடோல்ப் கிறிஸ்டியன் ற்றேவிரனுஸ்'' (Ludolpg Chrisitan Terviranus)<ref>Treviranus, Ludolph Christian 1811, "Beyträge zur Pflanzenphysiologie"</ref> மற்றும் ஜோஹன்ன் ஜாகப் பால் மொல்தேன்ஹவேர்'' (Johann Jacob Paul Moldenhawer)<ref>Moldenhawer, Johann Jacob Paul 1812, "Beyträge zur Anatomie der Pflanzen"</ref> ஆகியோர் முன்வைத்தனர்.
வரிசை 50:
நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) உள்ள [[நகரிழை]]கள் (Flagella), [[கணிமி]] (plasmid) போன்ற அமைப்புகள் நிலைகருவுள்ள உயிர்களிடம் ((Eukaryote)) காணப்படுவதில்லை. விதிவிலக்காக ஒரு உயிரணுவாலான (unicellular) நிலைகருவுள்ள உயிரான 'நுரைமம் அல்லது நொதி' (yeast), 2 micron என்ற [[கணிமி]]யைக் கொண்டுள்ளது.
 
நிலைகருவுள்ள உயிர்களிடம் (Eukaryote) உள்ள பச்சையவுருமணி, இழைமணி போன்ற கலப்புன்னங்கங்கள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் (prokaryotes) இல்லை. இவை இரு உயிர்களில் காணப்படும் றைபோசோம் அளவுகளில் மாற்றங்கள் உள்ளன. நிலைகருவற்ற உயிர்களிடத்தில் 70S றைபோசோமும் நிலைகருவுள்ள உயிர்களிடம் 80S றைபோசோமும் உள்ளன. றைபோசோமில் புரத உற்பத்தி நடைபெறுகிறது. பெரும்பாலும் நோய்களை அழிக்கும் அனைத்து மருத்துகளும் (antibiotics), இப்புரதஉற்பத்தியை தடுத்து, நுண்ணுயிர்களை பல்கிப் பெருக விடாமல் தடுக்கக்கூடியன.
 
நுண்ணுயிர்களின் புரத உற்பத்தி தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics), ஏன் நமது உடலில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க முடியவில்லை என வினா எழுகின்றது அல்லவா? இங்குதான் றைபோசோம் அளவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. நமக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் எதிரிகள், 70S றைபோசோமில் நடைபெறும் புரத உற்பத்தியை தடுக்க வல்லன.
 
மேலும் நிலைகருவுள்ள உயிர்களிடம் உள்ள [[பச்சையவுருமணி]], [[இழைமணி]] போன்றவைகளில் [[டி.என்.ஏ]] க்கள் உள்ளன. இவை பச்சையவுருமணி டி.ஏன்.எ என்றும், இழைமணி டி.ஏன்.எ என்றும் அழைக்கப்படும். படிவளர்ச்சி கொள்கையில் இவைகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் இருந்து தோன்றி இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பச்சையவுருமணி நீலப்[[பாசிகள் | பாசிகளிடம்]] இருந்தும், இழைமணி [[பாக்டீரியா]]விடம் இருந்தும் வந்திருக்கக்கூடும். இது [[அக ஒன்றிய வாழ்வுக் கொள்கை]] (Endosymbiotic) என அழைக்கப்படும். இக்கொள்கையை உறுதிபடுத்த மேலும் சில சான்றுகள்:
 
# பச்சையவுருமணி, இழைமணி உள்ள றைபோசோம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்ற 70S அளவுகளிலே உள்ளன.
# பச்சையவுருமணி மற்றும் இழைமணிகளில் உள் மற்றும் வெளிச் சவ்வுகள் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்று ஒத்து உள்ளது.
# [[டி.என்.ஏ]] ஆய்வுகள் முடிவும் [[பாக்டீரியா]] [[டி.என்.ஏ]]க்களோடு ஒற்றுமையாக செல்கின்றன.
# பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியின் போது, தொடங்கப்படும் அமினோ அமிலம் நிலைகருவற்ற உயிர்களிடத்தில் உள்ளதை போன்றது ஆகும். (N-formylmethionine ).
# இழைமணி, நிலைகருவற்ற உயிர்களை போன்ற மாற்றி அமைப்புகள் (transport system) கொண்டுள்ளன.
# நிலைகருவற்ற அளவுகள் நிலைகருவற்ற உயிர்களை போன்ற அளவுகாகும்.
# மேலும் நிலைகருவற்ற உயிர்களின் புரத உற்பத்தியை தடுக்கும் அனைத்து நுண்ணுயிர் எதிரிகளும் பச்சையவுருமணி, இழைமணி புரத உற்பத்தியைத் தடுக்கின்றன.
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரணுக்கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது