பிற்படுத்தப்பட்டோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சாதியமைப்பு" (using HotCat)
சி தானியங்கி:clean up
வரிசை 1:
அநீதியான சமூக ஏற்றத் தாழ்வுகளினால் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தளங்களில் வரலாற்று ரீதியாகப் பின்னடைந்த மக்கள் குழுக்களையே பிற்படுத்தப்பட்டோர் என்று அழைக்கிறோம். [[தலித்]] என்று அழைக்கப்படும் [[தாழ்த்தப்பட்ட சமூக மக்களை]] விட பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமை சிறிது மேம்பட்டதாக இருந்தது. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரைப் போலவே பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சார்ந்தவர்களும் [[உழைக்கும் வர்க்கத்தைச்]] சார்ந்தவர்களாவார்கள். எடுத்துக்காட்டாக, [[19-ஆம்]] மற்றும் [[20-ஆம்]] நூற்றாண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் [[கொத்தடிமைப் பண்ணையாட்களாக]] உழன்ற பொழுது பிற்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள் [[குத்தகை விவசாயிகளாகப்]] பணி புரிந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட மக்களும் [[கோவிலில் நுழையும் உரிமை]] மறுக்கப்பட்டு சமூகப் புறக்கணிப்புகளால் துன்புற்றனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடனும் மற்றப் [[பிராமணரல்லாத உயர்வகுப்பினருடனும்]] தங்களுடைய பொதுவானா பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நலன்களை முன்னிட்டு இணைந்த அரசியல் வரலாற்று நிகழ்வே [[திராவிட இயக்கத்தின்]] எழுச்சியாக அமைந்தது.
 
[[பகுப்பு:சாதியமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/பிற்படுத்தப்பட்டோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது