லாம்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Wiktionary|Λ|λ}} லாம்டா (uppercase '''Λ''', lower..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:44, 8 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

லாம்டா (uppercase Λ, lowercase λ; கிரேக்கம்|Λάμβδα அல்லது Λάμδα) என்பது கிரேக்க மொழியின் பதினோராவது எழுத்து ஆகும். கிரேக்க எண்ணியலில் இதன் மதிப்பு முப்பது ஆகும். லாம்டா பினீசிய எழுத்தான Lamedh லாமேட் என்கிற எழுத்து வடிவத்துடன் தொடர்புடையதாக கருதபடுகிறது. லத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிக் எழுத்துக்கள் போன்ற மற்றைய வரிவடிவங்களில் இந்த லாம்டா பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. லத்தீன் எழுத்துக்கள் - L, சிரில்லிக் எழுத்துக்கள் (Л, л). பண்டைய மொழியியல் இலக்கணத்தில் இது வித்தியாசமான ஒலியுடன் கூடியதாக இருக்கிறது. இதே எழுத்து கிரேக்க பழைய நடையில λάβδα என்று ஒலிக்கபடுகிறது. இதுவே நவீன கிரேக்கத்தில் Λάμδα, என்று ஒலிக்கிறது.

பழைய கிரேக்க எழுத்து முறையில் இதன் வடிவமும் திசையமைவும் வேறுபடுகிறது. பெரும்பாலும் இரண்டு பெரிய கோடுகள் முக்கோண வடிவில் இணைந்தோ அல்லது ஒரு பெரிய கோடு மற்றொரு சிறிய கோட்டின் மீது சிந்து இருப்பது போன்றோ குறிக்கபடுகிறது.

கிரேக்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கருப்பு மட்பாண்டம். இதில் பினீசிய எழுத்து முறையின் லாமெட் வடிவிலுள்ள லாம்டா.

குறியீடு

பெரிய எழுத்து வடிவம் Λ

  • லாம்டா என்பது கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணத்தை குறிக்க பயன்படுகிறது.   என்ற குறியீட்டின் மூலமும் குறிக்க படுகிறது.
  • லாம்டாவனது இயற்பியலில் துணையணுவியலில் பயன்படுத்தப்படுகிறது.
  • தர்க்க அடிக்கொள் முறைமையில் முதற்படி குறைப்பில் பயன்படுத்தப்படும் கணமாக உபயோகிக்கபடுகிறது.
  • லாம்டா குறியீடு ஸ்பார்டா படையணிகளில் கேடயங்களில் பயன்படுத்தப்பட்டன.
  • வான் மாங்கோல்ட் ஃபங்க்ஷன் எனப்படும் கணிதவியல் எண் கோட்பாடு முறையில் பயன்படுத்தப்படுகிறது.
  • புள்ளியியலில் வில்க்ஸ் லாம்டாவானது மாறுபாட்டெண் பலவெறுபாட்டு பகுப்பாய்வுடன் ஒருசார்ந்த மாறிகளை ஒப்பிட பயன்படுத்தப்படுகிறது.
  • அணி விரிவாக்கத்தின்பொழுது லாம்டாவனது அணிகளின் மூலைவிட்ட உறுப்புகளை குறிக்க பயன்படுகிறது.
  • கணினியியலில் லாம்டா மெய்நிகர் நினைவாற்றலின் கணங்களினை கண்காணிக்க உபயோகபடுத்தபடுகிறது.
  • படிக ஒளியியலில் அணிக்கோவை கால இடைவெளிகளை குறிப்பிட லாம்டா பயன்படுத்தபடுகிறது.
  • லாம்டா மின்வேதியியலில் மின்பகுளியின் சமன கடத்துதிறனை குறிக்கபயன்படுகிறது.
 
லாம்டா சிறிய எழுத்து

சிறிய எழுத்து λ

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாம்டா&oldid=1053642" இலிருந்து மீள்விக்கப்பட்டது