விக்கிப்பீடியா பேச்சு:இணக்க முடிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருத்தம்-2: விஜய்க்கு பதில்
Vij (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 161:
 
விஜய், இங்கு ஒன்று கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் எழுதுகிற கட்டுரைகள் மட்டும் திருத்தப்படுவது போல் தோன்றினால் அது பிழையாகும். உண்மையில் கலாநிதி, உமாபதி, நட்கீரன், என் கட்டுரைகள் என்று அனைவரின் கட்டுரைகளும் பல காரணங்களுக்காக பிற பயனர்களால் திருத்தப்படுகிறது. விக்கி ஒரு eco system போல் செயல்படுகிறது. எல்லாரும் கட்டுரை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால் விக்கியால் ஒரு பயனும் இருக்காது. சிலர் formating, சிலர் வீண் பக்கங்களை நீக்குதல், சிலர் படங்கள் சேர்த்தல் என்று பல பிரிவுகளில் கவனம் செலுத்தி செயல்படுகிறார்கள். இதில் ஒன்று தான் தமிழ் விக்கிக்கான மொழி நடையை தீர்மானித்தலும் திருத்துதலும். உங்கள் கட்டுரைகளை உங்கள் விருப்பம் போல் எழுத நிச்சயம் அனுமதிக்க முடியும். ஆனால், அவை முழு தமிழ் விக்கிபீடியாவுடன் ஒட்டாமல் தனி நடையில் காணப்படும். நீங்கள் உங்கள் கட்டுரைகள் திருத்தப்படுகின்றன என்ற நோக்கில் இருந்து பார்க்கும்போது திணிக்கப்படுவது போல் தோன்றினாலும், முழு தமிழ் விக்கிபீடியாவுக்குமான overviewஆக உங்களால் பார்க்க இயலுமானால் உங்களால் இத்திருத்தங்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். தமிழ் விக்கிபீடியாவை குறித்து பல கேள்விகள் உள்ளன - ஏன் இலங்கை நடை தெரிகிறது? ஏன் ஆங்கில நடை தெரிகிறது ? ஏன் வட மொழிக் கலப்பு அதிகம் இருக்கிறது? என்று பல கேள்விகள். இப்படி கேட்பவர்கள் பலரும் ஒரு சில கட்டுரைகளின் தோற்றத்தை முழு விக்கிபீடியாவுக்கும் பொருத்திப் பார்த்து விடுவது தான் பிரச்சினைக்கு காரணம். அதனாலேயே ஒவ்வொரு கட்டுரையின் தோற்றமும் முழு விக்கிபீடியாவின் மொழிநடைக்கு ஒத்திருக்க முயல்கிறோம். செல்வா, மயூரனாதன் போன்றோர் தமிழ் எழுத்துத் துறையில் அனுபவம், ஆர்வம் கொண்டவர்கள். பல கால கட்டங்களை , இயக்கங்களை, வாழ்க்கைச் சூழல்களை , பணியிடங்களை கடந்து இங்கு பணியாற்றுபவர்கள். நிச்சயம் அவர்களின் செயல்பாடோ பிற உறுப்பினர்களின் செயல்பாடோ இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிடுவது இல்லை. எந்த மொழிக் கலப்புக்கும் முன்னர் எல்லா சிந்தனைகளும் தமிழில் இருந்திருக்க வேண்டியவையே. அதனாலேயே, இந்தப் பொருளை பிற மொழிச் சொல்லால் தான் சொல்ல முடியும் என்ற வாதத்தை சற்றுத் தள்ளி வைத்து தமிழ் வேர்களை காண முயல்கிறோம். பொது ஊடகங்கள் தங்கள் சமூகக் கடமைகளை புறந்தள்ளி காலத்தை ஓட்டுவதிலும் பணத்தை ஈட்டுவதிலும் குறியாய்ச் செயல்படுகின்றன. நமக்கு அந்த கட்டாயங்கள் இல்லாததால் மொழி சார்ந்த ஒரு பொறுப்புடன் செயல்பட முயல்கிறோம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 21:24, 19 பெப்ரவரி 2007 (UTC)
:ரவி, நான் சொல்லவேண்டியதெல்லாம் எற்க்கெனவே சொல்லியாச்சு. ஆனாலும் என் முரண்நகை பார்ப்பு ஆர்வத்தில், இதை (உங்களுடையது) சமர்ப்பிக்கிரேன். "எந்த மொழிக் கலப்புக்கும் முன்னர் எல்லா சிந்தனைகளும் தமிழில் இருந்திருக்க வேண்டியவையே" ....." இந்தப் பொருளை பிற மொழிச் சொல்லால் தான் சொல்ல முடியும் என்ற வாதத்தை சற்றுத் தள்ளி". அது சரி, சுயமரியாதை என்னாச்சு. "நமக்கு அந்த கட்டாயங்கள் இல்லாததால் மொழி சார்ந்த ஒரு பொறுப்புடன் செயல்பட முயல்கிறோம்" - உங்களுக்கு பொறுப்பு வேண்டும் ஒரு கட்டாயமும் இல்லையே. கட்டாயத்தையும், பொறுப்பையும் தருவது நம் பிழைப்பு முறை - நம் எண்ணங்கள் அல்ல. அதுதான் கார்ள் மார்க்சின் "சரித்திரத்தின் உலகாயுத அடிப்படை" என்ற தத்துவம். இன்றைக்கு இதோட தத்துவத்தை முடிக்கிரேன்.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 12:13, 20 பெப்ரவரி 2007 (UTC)
Return to the project page "இணக்க முடிவு".